அம்மாடியோவ்.. கடலை.. காதல்ன்னு இருந்ததுக்கு இவ்ளோ சம்பளமா? கவின் பிக்பாஸ்ல சம்பாதிச்சத பாருங்க!

Recommended Video

KAVIN கூட நடிக்க எந்த HEROINE கும் விருப்பம் இல்ல | LIBRA RAVINDRAN | FILMIBEAT TAMIL

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் சம்பாதித்த பணம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் கவின். இந்த சீசனில் அதிகம் பெயரைக் கெடுத்துக்கொண்ட ஆண் போட்டியாளர் என்றால் அது கவின்தான்.

பங்கேற்ற நாள் முதல் கடலை காதல் என்று சக பெண் போட்டியாளர்களுடன் புகுந்து விளையாடினார் மனிதர். முதலில் 4 பெண்களிடம் கடலை போட தொடங்கிய கவின், பின்னர் சாக்ஷியை காதலிப்பதாக தெரிவித்தார்.

கட்டிப்பிடிப்பது

கட்டிப்பிடிப்பது

சாக்ஷியும் கவினும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சாக்ஷியின் கையை பிடித்து இழுப்பது, கட்டிப்பிடிப்பது, கண்ட இடங்களில் தொடுவது போன்ற வேலைகளை செய்திருந்தார் கவின்.

கமல் போட்ட குறும்படம்

கமல் போட்ட குறும்படம்

நேற்று முன்தினம் கமல் கவினுக்கு போட்டுக்காட்டிய குறும்படத்தில் கூட இந்தக் காட்சிகள்தான் அதிகம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இருவரும் காதலிப்பது தெரிந்து லாஸ்லியா கவினிடம் கடலை போட்டார். சாக்ஷி இருக்கும் வரை பிரன்ட்ஷிப் என்ற லாஸ்லியா, சாக்ஷி வெளியே போன பிறகு கவினுடன் இருப்பது காதல் என்று ஒப்புக்கொண்டார்.

கிண்டல் கேலி

கிண்டல் கேலி

எப்போதும் பிக்பாஸ் வீட்டின் சிவப்புக் கதவோரம் உட்காந்து கொண்டு லாஸ்லியாவுடன் கடலை போடுவது, ஹவுஸ்மேட்களுக்கு பட்டப்பெயர் வைத்து அவர்களை கிண்டல் செய்து கேவலமாக பேசுவது என நேரத்தைக் கழித்து வந்தார்.

வெளியேறிய கவின்

வெளியேறிய கவின்

பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க்கை கூட ஒழுங்காக செய்ததில்லை. ஒருமுறை கூட பிக்பாஸ் வீட்டின் பெஸ்ட் பர்ஃபாமராக தேர்வாகவில்லை. இந்நிலையில் கடந்த புதன் கிழமை பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின்.

வைரலாகும் சம்பளம்

வைரலாகும் சம்பளம்

இந்நிலையில் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பளம் என ஒரு பெரும் தொகை வைரலாகி வருகிறது. அதாவது நிகழ்ச்சி தொடங்கிய போதே போட்டியாளர்களின் சம்பளம் என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் என்ற பட்டியல் வெளியானது.

95 நாள் சம்பளம்

95 நாள் சம்பளம்

அதன்படி கவினுக்கு நாள் ஒன்றுக்கு 35000 ரூபாய் என கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வியாழக்கிழமை அதாவது 95வது நாள் வெளியேறுவதாக காண்பிக்கப்பட்டது.

சம்பளத்துடன் ரூ.5 லட்சம்

சம்பளத்துடன் ரூ.5 லட்சம்

அப்படி பார்த்தால் 95 நாட்களுக்கு 3325000 ரூபாய் கவின் சம்பாதித்துள்ளார். அதோடு கடைசியாக பிக்பாஸ் வழங்கிய 5 லட்சத்தையும் சேர்த்தால், 38 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நெட்டிசன்கள் பெருமூச்சு

நெட்டிசன்கள் பெருமூச்சு

இதனை பார்த்த நெட்டிசன்கள், சும்மா உட்காந்து காதல் கடலை என பெண்களின் உணர்வுகளோடு விளையாடி, கொண்டாடிய கவினுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா என பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X