இதுக்கு மேல உன்கிட்ட என்னால மரியாதையா பேச முடியாது.. கடைசி நேரத்தில் லாஸ்லியாவிடம் எகிறிய கவின்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய கவின் போகும்போது லாஸ்லியாவிடம் எகிறியது அவரது ரசிகர்களை கவலையடைய செய்தது.
பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறினார். இதற்கு ஒப்புக்கொள்ளாத ஹவுஸ்மேட்ஸ் கவினிடம் போக வேண்டாம் என கெஞ்சி மன்றாடினர்.
அதனை கொஞ்சமும் காதில் வாங்காத கவின் இந்த வாய்ப்பு எனக்கு மீண்டும் கிடைக்காது என்றார். இப்போது நான் வெளியே போகாவிட்டால் இதுவரை நான் பேசியது எல்லாமே டிராமா என்றாகிவிடும் என்றார்.

எந்த டிராமாவும் வேண்டாம்
நெருங்கிய நண்பரான சாண்டி, வேண்டாம் வேண்டாம் என்று அழுதபடி சொல்லியும் வெளியேறுவதில் உறுதியாக இருந்த கவின், இனியும் எந்த டிராமாவும் வேண்டாம். என்னை நல்லபடியாக வெளியே அனுப்பி வையுங்கள் என்றார்.

நீண்ட நாள் யோசித்தேன்
அப்போது லாஸ்லியா தனியாக அழைத்து சென்று பேசினார். ஆனால் லாஸ்லியா சொன்னதையும் கேட்காத கவின், நான் ஒரு முடிவோடு வந்தேன். நான் ஒன்றும் உடனே இந்த முடிவை எடுக்கவில்லை. வரும்போதே யோசித்துதான் வந்தேன் என்றார்.

என் முடிவு இது
ஆனாலும் விடாத லாஸ்லியா கவினை பிக்பாஸ் வீட்டில் தங்க வைக்க தொடர்ந்து ஆர்க்யூ செய்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையிழந்த கவின், உன்னுடைய முடிவை நீ எடுத்துக்கொள் என்னுடைய முடிவை நான் எடுத்துக்கொள்கிறேன் என கோபமாக பேசினார்.

ஞாபகம் வச்சுக்கோ
இதனால் மனமுடைந்த லாஸ்லியா, ஓகே உன்னுடைய முடிவை நீ எடுத்துக்கொள், என்னுடைய முடிவை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று திருப்பி திருப்பி கூறினார். அவரை சாமதானப்படுத்திய கவின், நான் சொன்னதை ஞாபகத்தில் வைத்து செயல்படு என்றார்.

அந்த போட்டோவை பாரு
அதற்கு நீ சொன்னது எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை என்றார் லாஸ்லியா. உடனே அந்த போட்டோவை பாரு உனக்கு எல்லாம் ஞாபகத்துக்கு வரும் என லாஸ்லியா அப்பாவின் போட்டோவை காண்பித்தார்.

கெஞ்சிய லாஸ்
பின்னர் சாண்டி முகென் என அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களிடமும் லிவிங் ஏரியாவில் நின்று பேசிக்கொண்டிருந்தார் கவின். அப்போது அங்கு வந்த லாஸ்லியா மீண்டும் கவினிடம் போக வேண்டாம் என கெஞ்சுகிறார்.

எகிறிய கவின்
இதனைக்கேட்ட கவின், இதுக்கு மேல உன்னிடம் என்னால் மரியாதையாக பேசுமுடியாது என ஒரே பாய்ச்சலாக பாய்ந்தார். பின்னர் வீட்டில் இருந்து மெயின் டோரான சிவப்பு கதவு வழியாக வெளியேறியபோது இருவரின் சுண்டு விரைலையும் கோர்த்த கவின், லாஸ்லியா கதற கதற லவ் யூ பா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











