சாவடிச்சுறுவேன்.. கஸ்தூரியை கத்தி மிரட்டிய கவின்.. மகத் போல் ரெட் கார்டுடன் வெளியேற்றப்படுவாரா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கஸ்தூரியை அசிங்கப்படுத்தியதோடு அவரை மிரட்டும் வகையில் கத்திய கவினை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கவின் கஸ்தூரியை ஒவ்வொரு நொடியும் அசிங்கப்படுத்தி வருகிறார்.
பெண், வயதில் மூத்தவர் என்ற எந்த தாட்சண்யமும் பார்க்காமல் அவரை கேவலப்படுத்தி வருகிறார். தான் கேவலப்படுதுவதோடு மட்டுமல்லாமல் மொத்த கேங்கையும் சேர்த்து கஸ்தூரிக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளார் கவின்.

விருப்பத்துடன் பேசினேன்
இன்று நான்கு பெண்களின் உணர்வுகளோடு கவின் விளையாடியது குறித்து மீண்டும் பேசினார் கஸ்தூரி. இதனால் ஆத்திரமடைந்த கவின், அந்த நான்கு பேரிடமும் அவர்களின் விருப்பத்துடன் தான் பேசினேன்.

சாவடிச்சுறுவேன்
இனிமே அதைப்பற்றி பேசினால் சாவடிச்சுறுவேன் என்று பயங்கரமாக கத்துகிறார். அப்போது அவரது கேங்கினர் அவரை ஆசுவாசப்படுத்துகின்றனர்.

மும்தாஜிடம் கத்திய மகத்
கடந்த சீசனில் மகத் இப்படிதான் மும்தாஜிடம் கத்தினார். அதற்காக ரெட் கார்டு கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கவினுக்கு ரெட்கார்டு?
அதேபோல் தவறு மேல் தவறு செய்து வரும் கவினையும் கமல்ஹாசன் ரெட் கர்டு கொடுத்து வெளியேற்றுவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆளாளுக்கு பெண்களை அடிக்க கை ஓங்குவதும் பெண்களிடம் கத்துவதும், பொருட்களை உடைப்பதும் பிக்பாஸ் வீட்டில் வாடிக்கையாகிவிட்டது.

எகிறும் க்ரைம் ரேட்ஸ்
இதற்கு முன்பு சாக்ஷியிடம் பாத்ரூமில் லூஸா நீ என பயங்கரமாக கத்தினார் கவின். அப்போதும் கமல்ஹாசன் கண்டுகொள்ளவில்லை. இதனால் கவின் மீதான க்ரைம் ரேட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனியாவது கமல் கவின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிகழ்ச்சியை நிறுத்துங்கள்
கவின் எப்படி கஸ்தூரியை கத்துகிறான், இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி. அவரது வயதுக்கு கூட மரியாதை இல்லை. மும்தாஜை கத்திய மகத்தை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்கள். இப்போது கவினையும் அதுபோல் வெளியேற்றாவிட்டால் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











