சிதறும் பாய்ஸ் கேங்.. லாஸ்க்காக சண்டை போடும் கவின்.. ஃபில் பண்ணும் சாண்டி.. கண்ணை மறைத்த காதல்..!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் வீ ஆர் த பாய்ஸ் என மார்தட்டிக்கொண்ட பாய்ஸ் கேங்கில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக லாஸ்லியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேப்டன் பதவிக்கான நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும் தர்ஷனும் விளையாடாமலேயே போட்டியிலிருந்து விலகி விட்டுக்கொடுத்தனர்.
இதனால் முதல் முறையாக பிக்பாஸ் வீட்டின் கேப்படாக பதவியேற்றுள்ளார் லாஸ்லியா. கேப்டன் என்ற வகையில் பிக்பாஸ் வீட்டில் ஆட்கள் பற்றாக்குறையால் எல்லோரும் எல்லா வேலையும் செய்ய வேண்டும் என கூறினார் லாஸ்லியா.

பாய்ஸ் கேங்கில் விரிசல்
இந்நிலையில் இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாது புரமோவில் பாய்ஸ் கேங்கில் விரிசல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பாய்ஸ் கேங்கில் உள்ள 5 பேரும் சிவப்பு கதவு பக்கம் உட்கார்ந்து காஃபி குடித்துக் கொண்டிருக்கின்றனர்.

லாஸ்லியாவால் பிரச்சனை
பின்னர் லாஸ்லியா காஃபி குடித்த ஆட்களெல்லாம் வா, வேலை இருக்கிறது என்று அழைக்கிறார். அப்போது சாண்டி, நீங்கள் கேப்டனாக இருப்பதால் வா உடனே போயிடலாம் அதை செய்யலாம் இதை செய்யலாம் என்று சொல்லாதீர்கள் என்கிறார்.

யாரும் சொன்னதில்லை
அதற்கு எப்போதும் போல எக்ஸ்க்யூஸ்மி என ஆரம்பிக்க்கும் லாஸ்லியா என் வேலையை எப்போதும் போலதான் செய்கிறேன் என்று கூறுகிறார். யாரும் காஃபி குடித்தவுடனே வா என்று சொன்னதில்லை என பதில் தருகிறார் சாண்டி.

கோபத்தில் லாஸ்லியா
உடனே கோபித்துக்கொள்ளும் லாஸ்லியா நீங்கள் வரத்தேவையில்லை, என திருப்பித் திருப்பி சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார். இதனை எதிர்பாராத சாண்டி லாஸ்லியா கோபித்துக்கொண்டாயா என கேட்கிறார். பதில் எதுவுமே பேசாமல் செல்கிறார் லாஸ்லியா.

கவினால் ஃபீல் பண்ணும் சாண்டி
இதனால் சாண்டி மீது கோபப்படும் கவின், நீ ஜாலி ஜாலி என டபால் என்று அவளை காயப்படுத்துகிறாய் என கூறுகிறார். காதலிக்காக தனது நண்பனே இப்படி கூறுவதை சற்றும் எதிர்பாராத சாண்டி ஃபீல் பண்ணுகிறார்.

கண்ணை மறைத்த காதல்
கவின், தனது காதலி லாஸ்லியாவுக்காக உயிர் நண்பனையே உதாசினப்படுத்துவதை பார்த்து தர்ஷனும் முகெனும் அதிர்ச்சியடைகின்றனர். கவின் காதல் கண்ணை மறைத்ததால் பாய்ஸ் கேங்கிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











