முன்னால் அக்கா.. பின்னால் அவள் இவள் என ஏக வசனம்.. நாளுக்கு நாள் டேமெஜ் ஆகும் கவின்!

Recommended Video

Watch Video : Mohan vaidhya,sakshi,abi Re-entry to bigg boss

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதாவை சக போட்டியாளரான கவின் தரக்குறைவாக பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா, கவினையும் லாஸ்லியாவையும் விளாசி வருகிறார். கவின் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பால் வனிதா அவர்களை வச்சு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

இதனை வனிதாவும் சரியாக செய்து வருவதால் அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வனிதா மைக்கை கழட்டி வைத்துவிட்டு பிக்பாஸ் அழைத்து விதிமுறைகள் குறித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கவினை சாடிய வனிதா

கவினை சாடிய வனிதா

மேலும் நாமினேஷனுக்கான காரணங்கள் சரியா என்று கேட்டும் ஷெரின், சேரன் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தார். அழுது அழுது சிம்பத்தி கிரியேட் பண்ணுவதாக கவினையும் சாடினார்.

அவள் இவள்

அவள் இவள்

அப்போது கார்டன் ஏரியாவில் சாண்டி, லாஸ்லியா, முகென், தர்ஷன் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள். அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்த கவின், வனிதாவை அவள் இவள் என தரக்குறைவாக பேசினார்.

ஏக வசனம்

ஏக வசனம்

அவ பிரச்சனையும் என்னுடைய பிரச்சனையும் ஒன்றா? அவளை போலவே எல்லோரும் கல்லாக இருப்பார்களா? என்று கோபமாக பேசினார். மேலும் அழக்கூடாது என்று சொல்ல இவ யாரு என்பது போன்றும் மரியாதை இல்லாமல் அவள் இவள் என்று ஏக வசனம் பேசினார்.

வயதுக்கு கூட..

வயதுக்கு கூட..

அதற்கு பதிலளித்த சாண்டி, அது எமோஷன்ஸ் புரியாமல் பேசுகிறது என்றார். சாண்டி வனிதாவின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் தரக்குறைவாக பேசினார்.

முன்னால் அக்கா அக்கா

முன்னால் அக்கா அக்கா

ஆனால் வனிதாவுக்கு முன்னால் மட்டும் வனிதா அக்கா அக்கா என்று பேசி நடிக்கிறார் கவின். கவினுக்கு பின்னால் பேசுவது என்பது இது ஒன்றும் புதிதல்ல. மற்றவர்களுக்கு கேவலமாக பட்டப் பெயர் வைப்பதும் பின்னால் இழிவாக பேசுவதும் கவினுக்கு அல்வா சாப்பிடுவது போல்.

நல்லவர் போல் நடிப்பு

நல்லவர் போல் நடிப்பு

மதுமிதாவுக்கு குள்ளச்சி என்றும் சேரனுக்கு சைக்கிள் என்றும் கஸ்தூரிக்கு காக்கா என்றும் பெயர் வைத்தார் கவின். இதனை கமல்ஹாசனே சுட்டிக்காட்டியும் அவர் தனது தவறை திருத்திக்கொள்ளாமல் உள்ளார். ஆனால் எல்லோருக்கும் முன்பு நல்லவர் போல் நடித்து வருகிறார்.

மோசமான சண்டைக்காரன்

கவின், வனிதாவுக்கு சமமாக வாயால் அடித்ததை பார்த்த பார்வையாளர்கள், வனிதாவை விட மோசமான சண்டைக்காரனா இருப்பான் போலயே என்று விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X