சேரப்பா வெளியே போனதும் லாஸ்லியாவிடம் வேலையைக் காட்டிய கவின்.. பட்டென பல்ஸை பிடித்த சேரன்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 78 : House mates nominate vanitha

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேறிய நிலையில் தன்னிடம் காதலை உறுதியாக சொல்லுமாறு லாஸ்லியாவை கவின் வற்புறுத்தி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் சேரன் வெளியேற்றப்பட்டார். சேரன் பெயர் உள்ள கார்டை காட்டி அழைத்த கமல், பிக்பாஸின் அறிவுறுத்தலின்படி அவரை சீக்ரெட் ரூமுக்கு அனுப்பினார்.

ஆனால் சேரன் சீக்ரெட் ரூமில் இருப்பது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது. அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவே நினைதுக்கொண்டிருக்கின்றனர்.

எந்த சோகமும் இல்லை

எந்த சோகமும் இல்லை

நேற்று முன்தினம் சேரன் வெளியே சென்றபோது கதறி கதறி அழுத லாஸ்லியா, நேற்றைய எபிசோடில் அந்த ஞாபகமே இல்லாமல் இருந்தார். எந்த ஃபீலிங்ஸும் இல்லாமல் அவர் எப்போதும் போல தனது நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்தார்.

வனிதா கண்ணீர்

வனிதா கண்ணீர்

குறிப்பாக கவினுடன் உட்காந்திருக்கும் ஒட்டி உரசி, வழக்கத்திற்கு மாறாக உட்காந்திருந்தார். ஆனால் வனிதா மட்டும் தனிமையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். பெட்டில் அழுதபடி கண்ணீரையும் கண்களையும் துடைத்துக்கொண்டிருந்தார்.

நான்கு லெட்டர் வார்த்தை

நான்கு லெட்டர் வார்த்தை

இந்நிலையில் எல்லோரும் ஒரு புறம் இருக்க கவினும் லாஸ்லியாவும் ஓரங்கட்டி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கவின், லாஸ்லியாவிடம் தன்னை காதலிப்பது குறித்த முடிவை சொல்லுமாறு வற்புறுத்துகிறார். நான்கு லெட்டர் வார்த்தை தானே நான்தான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேனே நீ சொல் என்று தொடர்ந்து லாஸ்லியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.

மசியாத லாஸ்லியா

மசியாத லாஸ்லியா

லாஸ்லியா வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறியும் கவின் விடவில்லை. லாஸ்லியா, வெளியே போய் பேசிக்கொள்ளலாம். எல்லோரும் நீங்கள் எதுக்காக இங்கே வந்தீங்க என்று கேட்கிறார்கள், அதனால் நாம் வெளியில் போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறுகிறார். வெளியே போய் பேசலாம், பேசுவோம் என்று கூறுகிறார். இதனால் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்ட கவினை லாஸ்லியா சமாதானப்படுத்துகிறார்.

நாமினேஷனில் தப்பிப்பதற்காக

நாமினேஷனில் தப்பிப்பதற்காக

இதனை சீக்ரெட் ரூமில் இருந்தபடி கண்காணித்த சேரன், இந்த வீட்டில் இருக்கும் வரை இதுகுறித்து இருவரும் பேசமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது கவின், லாஸ்லியாவை வற்புறுத்துகிறார். அவர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி ஒரு விஷயத்தை ஆரம்பிக்கிறார். ஆடியன்ஸ் இதை நல்லா கவனீச்சுக்குங்க என்று கூறுகிறார்.

சேரன் மீது பழி

சேரன் மீது பழி

லாஸ்லியா தன்னை காதலிப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட கவின், சேரன், மகள் எனக்கூறி நடிப்பதாக டிராம பண்ணுவதாக லாஸ்லியாவிடம் கூறி பிரைன் வாஷ் செய்தார். மேலும் லாஸ்லியா சேரன் குறித்த நியாயத்தை சொன்னபோதும் கூட, அவரை பற்றி என்னிடம் பேசாதே உனக்கு வேண்டுமானால் நீ எல்லாத்தையும் நம்பு என்னிடம் சொல்லாதே என்று கூறி முகத்தைக் காட்டினார்.

வேலையை ஆரம்பித்த கவின்

வேலையை ஆரம்பித்த கவின்

இந்நிலையில் சேரன் சீக்ரெட் ரூமில் இருப்பது தெரியாமல், அவர் வெளியேறிவிட்டதாக நினைத்து கவின் லாஸ்லியாவிடம் தனது வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். இதுநாள் வரை சேரன் இருந்ததால் வாயை மூடிக்கொண்டிருந்த கவின், சேரன் வெளியே போனதும் லாஸ்லியாவையும் தனது சுயநலத்துக்காக பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X