ஷெரின் பின்னால் சுற்றி கடலை போடும் கவின்.. எரிச்சலாகும் பார்வையாளர்கள்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சக போட்டியாளரான ஷெரின் பின்னால் சுற்றி கடலை போடுவதை பார்த்த பார்வையாளர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே அங்கிருந்த பெண் போட்டியாளர்களிடம் கடலை போட்டும் காதலித்தும் கன்டென்ட் கொடுக்க தொடங்கியவர் கவின். சாக்ஷியை காதலித்த போதே லாஸ்லியாவையும் காதலிக்க தொடங்கினார்.
இதனால் சாக்ஷியுடனான காதல் முறிந்தது. அதே நேரத்தில் லாஸ்லியாவுடனான காதல் தீவிரமடைந்தது. ஆனால் இந்த காதலை பார்வையாளர்களும் ரசிக்கவில்லை, லாஸ்லியாவின் பெற்றோரும் ரசிக்கவில்லை.

லாஸ்லியா மீது கோபம்
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, தனது மகளின் காதல் விவகாரத்தால் கடும் கோபம் கொண்டார். காதல் எல்லாம் வேண்டாம், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்து என கூறி கண்டித்தார்.

கவினுக்கு அட்வைஸ்
இதனை தொடர்ந்து, இனி தான் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த போவதாக கவினிடம் கூறினார் லாஸ்லியா. நீயும் அதேபோல் மகிழ்ச்சியாய் இரு கேமில் கவனம் செலுத்து என்று கவினுக்கு அட்வைஸ் செய்தார்.

ஷெரின் பின்னால் கவின்
இதனால் கவினுடனான காதலை லாஸ்லியா முறித்துக்கொண்டதாக நம்பப்பட்டது. இந்நிலையில் தற்போது ஷெரின் பின்னால் சுற்ற தொடங்கியுள்ளார் கவின். ஷெரினிடம் சென்று வான்ட்டடாக கடலை போட்டு வருகிறார் கவின்.

இரிட்டேட்டிங்
ஷெரின் முகத்திற்கு மிக நெருக்கமாக விரல்களால் வித்தை காட்டி வருகிறார். மேலும் தேவையில்லாத டயலாக்குகளையும் பேசி வருகிறார் கவின். ஷெரின் தனக்கு பிடிக்கவில்லை, இரிட்டேட்டிங்கா இருக்கு என்று கூறியும் அவரை தொடர்ந்து தொல்லை செய்து வருகிறார் கவின்.

ஷெரினை காலிப்பண்ணவா?
லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் இப்படி ஒரு முடிவை கவின் எடுத்துள்ளாரா? அல்லது ஷெரினை காலிப்பண்ண இந்த யுத்தியா அல்லது லாஸ்லியாவை வெறுப்பேற்றவா என்பது தெரியவில்லை. ஆனால் இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஷெரின் சொன்னது சரி
இப்போ எதுக்கு கவின் ஷெரின் பின்னாடியே சுத்துறான்.!!
சரியில்லையே...!!! நீ இருக்குறது உலகத்தில் பிரச்சினை என்று ஷெரின் சொன்னது 100% சரி என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
மொக்கை போடும் கவின்
நேத்துலாம் கொலை காண்டாக்கிட்டீங்க.. லாஸ்லியாவே கேம் விளையாடுறா.. இந்த கவின் உப்புக்கு சாப்பானிதான் எல்லா கேமுலேயும். மொக்கை போடுறத தவிர. இவர் பேசுறதா பார்த்தா அந்த பொண்ணுக்கு இல்ல எல்லா பொண்ணுக்குமே பைத்தியம் தான் பிடிக்கும்.. ஃபிராடு பையன் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
காமெடி பீஸ்
இப்படியே பேசிட்டு சுத்து காமெடி பீஸ்.. என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











