தம்பிக்கு வாய் ஜாஸ்தி..தெளிவா பேசினாலே புரியாது.. நக்கலடித்த கவின்! செருப்படி பதில் கொடுத்த கமல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Reshma is Back to House : மீண்டும் வீட்டிற்குள் நுழையும் Reshma

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், நடிகர் கமல்ஹாசன் பேச்சு தமக்கு புரியவில்லை என்று கூறி நக்கலடித்தது பார்வையாளர்களை கடுப்பேற்றியது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். அப்போது வாரம் முழுவதும் நடக்கும் சம்பவங்கள் குறித்து விவாதிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினமும் நேற்றும் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்தார். சனிக்கிழமை ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், சேரன் மற்றும் சரவணன் பிரச்சனை குறித்து பேசினார்.

நீங்களா சொல்றீங்களா?

நீங்களா சொல்றீங்களா?

பின்னர், கவினின் காதல் விளையாட்டை கையில் எடுத்த அவர், நீங்களா சொல்கிறீர்களா அல்லது நான் கேட்கவா? என்றார். என்ன சொல்லனும் என்பதை போல் புரியாத மாதிரி கேட்டார்.

தெளிவா பேசினாலே புரியாது

தெளிவா பேசினாலே புரியாது

உடனே கமல், நீங்கள் சொல்லாவிட்டால் சாக்ஷியிடம் கேட்பேன் என்றார். இப்படி கவினின் முக்கோண காதல் கதை குறித்து கேட்ட கமலை நக்கலடிக்கும் வகையில், யாராவது தெளிவா பேசினாலே எனக்கு புரியாது என்றார்.

கமல் கொடுத்த பதிலடி

கமல் கொடுத்த பதிலடி

கமல் தெளிவாக பேசவில்லை என்றும் அது தமக்கு சுத்தமாக புரியவில்லை என்றும் கூறினார் கவின். அதற்கு பதிலளித்த கமல் புரியவில்லை என்று சொல்லாதீர்கள் அப்படியானால் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி பதிலடி கொடுத்தார்.

எஸ்கேப்பாகும் அரசியல்வாதிகள்

எஸ்கேப்பாகும் அரசியல்வாதிகள்

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கமல் அரசு குறித்தும் ஆட்சியாளர்கள் குறித்தும் அவ்வப்போது கருத்து கூறி வருகிறார். அது குறித்து பேசும் போது அரசியல்வாதிகள் கமல் பேசுவது புரியவில்லை என எஸ்கேப்பாகி விடுகின்றனர்.

எஸ்கேப்பாக பார்த்த கவின்

எஸ்கேப்பாக பார்த்த கவின்

அதேபோல் கவினும் செய்யக் கூடாததையெல்லாம் செய்துவிட்டு தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றுக்கூறி எஸ்கேப்பாக பார்த்தார். ஆனாலும் கமல் விடவில்லை. நான்கு பேரை காதலித்த விஷயத்தை கவின் வாயாலேயே வரவைத்து, அது தப்பில்லையா என கேட்டு சவுக்கடி கொடுத்தார்.

நன்றாகவே புரிந்தது

நன்றாகவே புரிந்தது

தனது பேச்சு புரியவில்லை என அரசியல்வாதிகள் கூறி வரும் நிலையில் கவினும் புரியவில்லை என நக்கலாக கூறியதை நன்றாகவே புரிந்துகொண்டார் கமல். அதற்கு அவர் கவினுக்கு கூறிய பதிலில் பார்வையாளர்களுக்கு மிக நன்றாகவே புரிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X