twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதான் நேத்தே முடிஞ்சிடுச்சே.. இன்னும் என்ன சமதானம்?! உச்சத்தில் கவின் - சாக்ஷி காதல் சண்டை!

    |

    சென்னை: நேற்றே தங்களுக்குள் எதுவும் இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது என சாக்ஷி கூறிவிட்ட நிலையில் கவின் இன்று சாக்ஷியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாக்ஷியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கவின் லாஸ்லியாவுடன் நெருக்கமாக பழகினார்.

    எப்போதும் லாஸ்லியாவுடன் கடலை போடுவதையும் அவரிடம் வழிவதையும் கண்ணும் கருத்துமாக செய்து வந்தார் கவின். ஆனால் இது கொஞ்சமும் சாக்ஷிக்கு பிடிக்கவில்லை.

    எல்லாம் முடிந்துவிட்டது

    எல்லாம் முடிந்துவிட்டது

    இதனால் ஏற்கனவே கவினுக்கும் சாக்ஷிக்கும் சண்டை வந்தது. நேற்றைய எபிசோடில் கவின் லாஸ்லியாவுக்கு சாக்லேட் கொடுத்ததால் கோபமடைந்த சாக்ஷி, எல்லாம் முடிந்துவிட்டது என கூறி பிரேக்கப் செய்தார்.

    இன்றும் முயற்சி

    இன்றும் முயற்சி

    கவின் எவ்ளோவோ முயற்சி செய்தும் சாக்ஷியை சமாதானம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் இன்று வெளியான புரமோவிலும் சாக்ஷியை கவின் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.

    ஏன் எமோஷன்

    ஏன் எமோஷன்

    பிரச்சனையை பேசி சரி செய்யலாம் என சாக்ஷியிடம் பேசுகிறார் கவின். அதற்கு வெறும் ஃபிரன்ட்ஷிப் என்றால் ஏன் அவ்வளவு எமோஷன் ஆனாய் என கேட்கிறார் சாக்ஷி.

    பேசி பிரச்சனையை சரி செய்யலாம் என கவின் கூற சரி செய்ய ஒன்றும் இல்லை என கூறும் நீ உன் விளையாட்டை விளையாடு நான் என் வழியில் செல்கிறேன் என்கிறார் சாக்ஷி. இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ.

    போரடிக்கிறது


    இதனை பார்த்த ரசிகர்கள், கவின் கடலை போடுவதை பார்க்க போரடிக்கிறது என கருத்து கூறியுள்ளனர்.

    முழிச்சுக்கோ

    மேலும் கவின் பெரிய தவறு செய்துவிட்டாய், இனிமேலாவது முழிச்சுக்கோ, எல்லாத்தை இழந்துவிடாதே என்றும் பலர் அட்வைஸ் செய்துள்ளனர்.

    English summary
    Kavin tring to solve the issue with sakshi in the biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X