சேரனை கெட்ட வார்த்தையால் திட்டும் கவின்.. தொடர்ந்து அசிங்கப்படுத்துவது தெரியாதா பிக்பாஸ் உங்களுக்கு?

Recommended Video

Bigg Boss 3:16th August Promo1:Day54:Madhuவை அசிங்கப்படுத்திய Losliya

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் சேரனை கெட்ட வார்த்தையால் திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரனை கவினுக்கும் சாண்டிக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவரை பின்னால் தரக்குறைவாக விமர்சிப்பதையும் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் பேசுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சரவணனுக்கும் சேரனுக்கும் பிடிக்காமல் இருந்தபோது சரவணன் போட்ட தூபத்தால் சேரனை வெறுக்க தொடங்கினர். அதனை இன்றும் ஃபாலோ செய்து வருகின்றனர்.

சேரனை அசிங்கப்படுத்தும் கவின்

சேரனை அசிங்கப்படுத்தும் கவின்

குறிப்பாக கவினும் சாண்டியும் சேரனை கிடைக்கும் கேப்பில் எல்லாம் அசிங்கப்படுத்தி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள்முதல் சேரன் ஈதான் ஓட்டி வருகிறார் என கேவலமாக கமெண்ட் அடித்தார் கவின்.

கிண்டல் கேலி

கிண்டல் கேலி

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு சேரன்தான் காரணம் என்று பின்னால் பேசுகின்றனர். கவின், சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா ஆகியோர் ஒரு கேங்காக சேர்ந்துகொண்டு மற்றவர்களை கிண்டலடித்து வருகின்றனர்.

மரியாதை

மரியாதை

இதனால் விரக்தியடைந்த சேரன், அவர்களுடன் உரிமையோடு பேச விரும்பவில்லை போலும். தர்ஷன் உட்பட அனைவரையும் சார் என்றே மரியாதையுடன் அழைத்து வருகிறார்.

நேற்றைய எபிசோடில் பாத்ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் சாண்டி, கவின், தர்ஷன், முகென் மற்றும் லாஸ்லியா. அப்போது அங்கு வந்த சேரன், தர்ஷனை சார் என அழைத்து வெளியே கூப்பிட்டார்.

கெட்டவார்த்தை பேசும் கவின்

கெட்டவார்த்தை பேசும் கவின்

இதைத்தொடர்ந்து சாண்டியும் சேரனை நக்கல் செய்யும் விதமாக சார் சார் என்று அழைத்தார். அப்போது நான் நக்கல் செய்ய ஆரம்பித்தால் தாங்கமாட்டார் என ஏதோ ஒரு கெட்டவார்த்தையை பேசுகிறார் கவின். மேலும் ரொம்ப ஓவரா போறாப்ள என்றும் கூறுகிறார் கவின்.

கவனிக்க மாட்டீங்களா?

கவனிக்க மாட்டீங்களா?

கவின் பேசிய கெட்ட வார்த்தை எடிட் செய்யப்பட்டுள்ளது. இதனை பிடித்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். மேலும் இவற்றையெல்லாம் பிக்பாஸ் கவனிக்க மாட்டாரா? பல விஷயங்களிலும் கவின் மீது பிக்பாஸ் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, அவர் விஜய் டிவியில் இருந்து வந்தவர் என்பதாலா என்றும் விளாசி வருகின்றனர்.

கவினுக்கு ஒரு நியாயம்

சரவணனுக்கு ஒரு நியாயத்துடனும் கவினுக்கு ஒரு நியாத்துடனும் பிக்பாஸ் நடந்துகொள்கிறார் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வாரமாவது கமல்ஹாசன், கவினையும் சாண்டியையும் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X