உடம்பு கலரிலேயே.. டிரஸ் போட்டுக் கொண்டு.. கலக்கிய "முல்லை" காவ்யா!

சென்னை: உடம்பு கலரிலேயே வலை போல உடை போட்டுக்கொண்டு கலக்கலாக வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர் நியூ முல்லை காவியாவின் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு தரிசனத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் திக்குமுக்காடி போய் இருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் முதன்மையான சீரியலாக வந்து கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான்.

இந்த சீரியலின் முக்கிய கதை குடும்ப ஒற்றுமை யாக இருந்தாலும் பல ரசிகர்களால் ரசிக்கப்படும் கேரக்டர் முல்லை கதாபாத்திரம் தான்.

முல்லை சித்ரா

முல்லை சித்ரா

அனைவரின் மனதை கவர்ந்த கேரக்டரில் இதற்கு முன்னர் வரை விஜே சித்ரா நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் இறந்ததும் அவருடைய இடத்திற்கு பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காவியா இதில் களமிறங்கியதும் முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்த ரசிகர்கள் கூட தற்போது இவரை ஏற்றுக்கொண்டு விட்டனர். இரண்டு சீரியல்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார்.

வாழ்த்து

வாழ்த்து

அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் பிறந்தநாளுக்காக சிறப்பு தரிசனத்தை காட்டியிருக்கிறார் .அதுவும் வலை போன்ற உடையில் நயன்தாராவின் மேக்கப் போட்டுக் கொண்டு வித்தியாசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் .பலர் சூட்டிங் ஸ்பாட்டில் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிட்டு வரும் நிலையில் இவர் இழுத்துப்பூட்டிய மேக்கப் ரூமுக்குள் உடம்பு கலரில் உடை உடுத்திக்கொண்டு அழகாக வெட்கப்பட்டு இவர் வெட்கப்படும் அழகை பார்த்து ரசிக்கும் ரசிகர்களையும் வெட்கப்பட வைத்திருக்கிறார்.

பிசியான காவ்யா

பிசியான காவ்யா

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் பாரதிகண்ணம்மா சீரியலிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இரண்டு சீரியலிலும் இவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இதுவரைக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில் இவர் சைடு ரோலில் இருந்தவர் தற்போது கதாநாயகியை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸ் சீனில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் .

பாச மழை சீன்

பாச மழை சீன்

இதற்கு முன்னர் வரை இந்த சீரியலில் இவரும் அகிலும் ஒட்டாமல் இருந்த இவர்கள் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு அகில் இவர் மீது பாசமழை பொழியும் சீன்கள் தற்போது ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலின் கதை இப்போது தான் நன்றாக சூடு பிடித்திருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர் .இவ்வளவு நாளா தன்னுடைய வில்லத்தனத்தை இந்த சீரியலில் காட்டிக்கொண்டிருந்த அவர் தன்னால் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாகவே கொஞ்சி நடித்து பிறரை கொஞ்ச வைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

சூப்பர் தேவதை

சூப்பர் தேவதை

இவர் அடிக்கடி பிரைடல் போட்டோசூட்டிலும் மாடல் உடையிலும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும் தற்போது தேவதை ஆக கலங்கி இருப்பதை பார்த்து அவருடைய ரசிகர்கள் உச்சுக் கொட்டி ரசித்து வருகின்றனர் .இது யாரு நம்ம அறிவா இப்படி மாறி விட்டார் என புகழ்ந்து தள்ளி விடுகின்றனர் .அதுலயும் சிலர் கண்களுக்கு இவர் நயன்தாராவைப் போலவே இருக்கிறாராம் .

இவரும் நயன்தாராவா

இவரும் நயன்தாராவா

அதனால் இவருக்கு சீரியல் நயன்தாரா படத்தை கொடுத்து விடுவார்கள் போல. ஏற்கனவே சின்னத்திரை நயன்தாரா வாக வாணிபோஜன் இருக்கிறார் . ஆனால் இவரையும் அந்த மாதிரி தான் தற்போது அழைத்து வருகின்றனர். மாடல் உடையில் போட்டோஸ் போட்ட சிறிது நேரத்திற்குள் சேலை கட்டிக்கொண்டு ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு மீண்டும் நவ ரசத்தைப் பிழிந்து சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார்.

கமெண்ட்டில் கொஞ்சல்

கமெண்ட்டில் கொஞ்சல்

இதனை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் கொஞ்சிக் கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் . சீரியலில் மட்டும் நீங்க தேவதை இல்ல நிஜத்திலும் தேவதை மாதிரி தான் இருக்கீங்க என இவருக்காக வராத கவிதைகளை எல்லாம் வரவைத்து உருகி வருகிறார்கள் .இந்த மாதிரி போஸ்ட் போட்டுக்கிட்டு இருந்தா பல ரசிகர்கள் சீக்கிரமாக கவிஞர்களாக மாறி விடுவார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X