பனிமலையும், எரிமலையும் ஒன்னா சேருதாமே.. வெட்கத்தப் பாருங்கய்யா காவ்யாவுக்கு!

சென்னை : இது ஏதோ புரியாத உணர்வு என புதிய உணர்வை வெளிப்படுத்திய காவியா அறிவுமணியின் ரீல்ஸ் வைரலாகியுள்ளது. ஆனாலும் இது கொஞ்சம் லைட்டா ஓவர்தான் என கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்

பார்க்கும் பார்வையால் அப்படியே நயன்தாராவின் டூப்பு போல இப்படி பிண்ணுறீங்களே என பலரும் கேட்டு வருகின்றனர்.

தனக்குள் இருக்கும் திறமையை விட்டுவிட்டு அடுத்தவர்களை காப்பி செய்யாதிங்க என அட்வைஸ் பண்ணவும் செய்கிறார்கள் சிலர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் காவியா அறிவுமணிக்கு ,ஸ்வீட்டி என்ற செல்லப் பெயரும் இருக்கிறது .ஆனாலும் தற்போது ரசிகர்கள் இவரை அஞ்சலி என்றுதான் அழைத்து வருகின்றனர் .பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் இவர் அறிமுகமாகும்போது இவரை திட்டி தீர்த்த ரசிகர்கள் தற்போது ஐயோ பாவம் என்று இவருக்கு சர்டிபிகேட் கொடுத்து வருகின்றனர்.

அஞ்சலி அஞ்சலி

அஞ்சலி அஞ்சலி

நெட்டிசன்கள் ட்ரோல் செய்து பாரதிகண்ணம்மா சீரியல் பாப்புலர் ஆனது அனைவருக்கும் தெரியும் .ஆனால் அந்த சீரியலில் கண்ணம்மாவுக்கும் ,வெண்பாவுக்கும் அடுத்ததாக அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சலியாக நடிக்கும் காவியாவைத்தான் .எப்படி ஒரு அக்காவை இப்படி எல்லாம் பொறாமை பட முடிகிறது என பலர் இவரை வைத்து மீம்ஸ்களை போட்டு வந்தனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய கேரக்டரில் தன் நடிப்பு முக்கியம் என அதை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.

மாடலிங் ஆசை

மாடலிங் ஆசை

இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்னரே காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போது நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மாடலின் பக்கம் திரும்பியிருக்கிறார் .அதன் காரணமாக இவர் மாடலின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் .அதிலிருந்து தான் இவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலிலும் இவர் ஒரு மாடலாக அறிமுகமாகி வில்லியாக கண்ணமாவை பாடாய்படுத்தி விட்டு தற்போது ஐயோ பாவம் இவர் நிலைமை என்ன ஆகுமோ என ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

நயன்தாரா ரசிகை

நயன்தாரா ரசிகை

இவர் நடிகை நயன்தாராவின் தீவிரமான ரசிகை என்பது பலருக்கும் தெரியும் அதனால் தான் அடிக்கடி நயன்தாராவின் கெட்டப்பில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் .அந்த மாதிரி தான் தற்போது இன்ஸ்டாகிராமில் யாரடி நீ மோகினி படத்தில் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ போட்டிருக்கிறார் . இதை பார்த்ததும் நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர் .

Recommended Video

Mullai Character எனக்கு ஒரு Opportunity தான் | Kaviya Arivumani Latest | Pandian Stores
அவர் மாதிரியே

அவர் மாதிரியே

ஒருவரை பிடித்தால் இப்படியா அவர் போலவே மாறிவிடுவீர்கள் என சிலர் கலாய்த்தாலும் , அடடா என்ன அழகு நாங்க கூட பார்த்ததும் நயன்தாரா தானோ என்று நினைத்து விட்டோம் என சிலர் உருகியும் வருகின்றனர். யார் என்ன சொன்னாலும் அந்தப் பாடலின் கடைசி வரியில் அவர் விடும் லுக்கும் அந்த அழகான சிரிப்பு தான் வேற லெவல். வெட்கத்திலும் காவியா தனி ரகம்ய்யா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X