Bigg Boss 3: 17வது போட்டியாளர் செம்பா இல்லை புள்ளப்பூச்சி நடிகையா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Alya Manasa Entry : பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் செம்பா- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டிற்குள் ஒயில்டு கார்டு மூலம் செல்லப் போவது ஆலியா மானசா அல்ல மாறாக கயல் ஆனந்தி என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் 3 வீட்டிற்குள் ஒயில்டு கார்டு மூலம் செல்லப் போகும் போட்டியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர். 2வது ஆளாக வெளியேற்றப்பட்ட வனிதா அக்காவையே ஒயில்டு கார்டு மூலம் மீண்டும் அழைத்து வந்து பிக் பாஸ் வீட்டை சுவாரஸ்யமானதாக ஆக்குமாறு பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜா ராணி தொலைக்காட்சி தொடரில் செம்பாவாக நடித்து பிரபலமான ஆலியா மானசா தான் ஒயில்டு கார்டு மூலம் பிக் பாஸ் 3 வீட்டிற்கு செல்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை கயல் ஆனந்தி தான் அந்த ஒயில்டு கார்டு என்ட்ரி என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3

பிக் பாஸ் 3

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் வரை இவர்கள் தான் போட்டியாளர்கள் என்று கூறி ஒரு பட்டியல் உலாவிக் கொண்டிருந்தது. அது போன்று தான் தற்போது கயல் ஆனந்தியின் பெயரும் அடிபடுகிறது. ஆனந்தி படங்களில் பிசியாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி

கயல் ஆனந்தி வரப் போகிறார் என்ற தகவல் அறிந்த ரசிகர்களோ, வேண்டாம்மா உங்களுக்கு அது செட்டாகாது. முக்கோண காதல் கதையில் உங்களையும் கோர்த்துவிட்டு இமேஜை டேமேஜ் செய்துவிடுவார்கள். பிக் பாஸ் பிராடும்மா, போகாதீங்கம்மா என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செம்பா

செம்பா

செம்பாவுக்கு ஏற்கனவே சின்னய்யாவுடன் காதல் செட்டாகிவிட்டதால் அவரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தாலும் யாருடனும் சேர்த்து காதல் கதை ஓட்ட முடியாது. இந்நிலையில் தான் சிங்கிளான கயல் ஆனந்தியை அழைத்து வர திட்டமிட்டுள்ளார்களாம். அப்படி என்றால் இருக்கு கவினுக்கு இன்னொரு காதல் வரும் வாய்ப்பு இருக்கு. மறுபடியும் கவின் காதலை காட்டி எத்தனை வாரத்தை ஓட்டப் போகிறார்களோ.

போர்

போர்

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து இந்த சீசன் தான் இருப்பதிலேயே மொக்கையான சீசன் என்று சொல்லாதவர்களே இல்லை. ஊரில் உள்ள மொக்கை பீஸுகளை எல்லாம் அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தி எங்களின் பொறுமையை சோதிக்காதீங்க பிக் பாஸ் என்று பார்வையாளர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X