தினமும் அடி உதை.. தற்கொலை தான் ஒரே வழி.. எனக்கு என் புருஷன் வேணும்.. கதறிய நடிகரின் மனைவி!
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் தான் கயல். டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் இந்த சீரியலில் கயலின் அண்ணனாக மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஐயப்பன். அவரின் மனைவி தனது கணவர் தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துவதாகவும், எப்போதும் போதையிலேயே இருப்பதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியிள்ளார்.
கயல் சீரியல் படப்பிடிப்பு மதுரவாயலில் ஒரு ஷூட்டிங் ஹவுசில் நடைபெற்றுக்கொண்டு இருந்த போது, நடிகர் ஐயப்பனின் மனைவி என் வாழ்க்கை நாசமாகிவிட்டது, மீடியா ஆட்களுடன் அந்த இடத்தில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய, நடிகரின் மனைவி பிந்தியா, என்னுடைய கணவர் பெயர் ஐயப்பன், அவர் கனாக்காணும் காலங்கள் சீரியலில் நடித்திருக்கிறார். தற்போது கயல் சீரியலில் நடித்து வருகிறார். அவர் கடந்த மூன்று வருடமாக என்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதில்லை என்னையும் கவனித்துக் கொள்ளவில்லை, செலவிற்கு பணமும் தருவது இல்லை. எப்போது பணம் கேட்டாலும் இல்லை என்று தான் சொல்கிறார்.

கயல் சீரியல்: எந்த நேரமும், டோப் அடித்து விட்டு ஒருவிதமான மயக்கத்திலேயே இருக்கிறார். வீட்டிற்கு வந்து என்னையும் என் குழந்தையும் அடிப்பது மட்டுமில்லாமல், கெட்டக்கெட்டவார்த்தையால் திட்டுகிறார். என்னுடைய அப்பா அம்மாவிற்கு ஃபோன் செய்து, நான் உங்கள் மகளை விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொல்கிறார். விவாகரத்து செய்வதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அதையும் அவர் சொல்வதில்லை. இதற்கு முன் அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அப்போது எல்லாம், அவர் இப்படி நடந்து கொண்டது இல்லை. இந்த கயல் சீரியலில் நடித்துத்தான் என் வாழ்க்கையே போச்சு.

தற்கொலை தான் ஒரே வழி: வீட்டு வாடகை கட்ட வேண்டும், குழந்தையை பார்க்க வேண்டும், 3 மாதமாக நான் என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறேன். இதுகுறித்து நான் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறேன். நான் விவாகரத்து செய்துவிட்டு போவதற்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனால், எனக்கு என் புருஷன் தான் வேண்டும், என் குழந்தைக்கு அப்பாவாக அவர் இருந்தால் போது, இப்படியே போச்சு என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நடிகர் அய்யப்பனின் மனைவி கதறி அழுதபடி பேசி உள்ளார். அதுமட்டுமில்லாமல், நடிகர் அய்யப்பன் போதையில் இருக்கும் வீடியோ ஆதாரத்தையும் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
கயல் சீரியல்: கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், கோபி, அபிநவ்யா, முரளி ராஜ், அவினாஷ், பிர்லா போஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











