கயல் சீரியல் வேண்டாம்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடிகரின் மனைவி வாக்குவாதம்.. அடுக்கடுக்கான புகார்!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி பிந்தியா கயல் சூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதால் களேபரம் ஆகியிருக்கிறது. மேலும், தனது கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதனால், கயல் சீரியல் சூட்டிங் கொஞ்ச நேரம் தடைபட்டதாம்.
பெண்கள் மத்தியில் பிரபலம் அடைந்த சீரியல் கயல். சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக கயல் சீரியல் ஒளிபரப்பாகி வெற்றியடைந்திருக்கிறது. கயல் தற்போது எழிலையும் திருமணம் செய்து தனது குடும்பத்தையும் எப்படி கவனித்து வருகிறார் என்பது தான் கதையாக தொடர்கிறது. இதில், கயலுக்கு அண்ணனாக நடிப்பவர் அய்யப்பன். இவர் கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக கயல் சீரியலில் மூர்த்தியின் கதாப்பாத்திரம் மக்களுக்கு ஃபேவரட்டாக இருக்கிறது.

கயல் சீரியலின் கதைப்படி தங்கைக்கு நல்ல அண்ணனாக இருக்கும் மூர்த்தி, நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்டவரா என அதிர்ச்சியளிக்கிறது. கயல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த இவரது மனைவி ஐயப்பனை பற்றிய உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். நடிகர் ஐயப்பன் ஊட்டியை சேர்ந்த பிந்தியா என்ற பெண்ணை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்த நிலையில், அவ்வப்போது சண்டை போட்டுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.
வீட்டிற்கு வருவதில்லை: இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் கயல் சீரியலின் சூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது வந்த ஐயப்பன் மனைவி வாக்குவாதத்தில் ஈடுரபட்டிருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சித்தனர். அப்போது பேசிய அவர்,கடந்த 3 மாதமாக ஐயப்பன் வீட்டிற்கே செல்லவில்லையாம். கயல் சீரியலால் என் வாழ்க்கையே போச்சு என பிந்தியா புலம்புகிறார். நன்றாக சம்பாதித்தாலும் என்னையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்திருக்கிறார். குடும்ப செலவிற்கு கூட பணம் தருவதில்லையாம்.

போதை மருந்து: கயல் சீரியலால் தனது கணவர் ஐயப்பன் போதை பொருளை பயன்படுத்தி என்னை ஆபாசமாக திட்டுகிறார். இதுதொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். 3 வருடங்களாக ஐயப்பன் பணம் தரவில்லை. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என ஐயப்பன் மனைவி பிந்தியா தெரிவித்துள்ளார். மேலும், என் குழந்தைக்கு அப்பா வேண்டும். அவள் பள்ளிக்கு செல்ல இருக்கிறாள். என் குழந்தையை காக்க வேண்டிய பொறுப்பு இருவருக்கும் இருக்கிறது. கயல் சீரியல் வேண்டாம் என்பதை தெரிவிக்கவே கயல் மீடியாவை சந்தித்தேன் என்றார்.
குடும்ப பிரச்னை: ஐயப்பன் மனைவி பிந்தியாவிடம் சீரியல் நிர்வாகத்தினர் கண்டித்திருக்கின்றனர். இங்க பாருங்கம்மா உங்க குடும்ப பிரச்னையை இங்கே வந்து பேசக்கூடாது. பிரைவேட் ஏரியாக்களில் வந்து கூச்சல் இடாதீர்கள். உங்களுக்கான பிரச்னையை வீட்டில் பேசி முடிவெடுத்து கொள்ளுங்கள். ஐயப்பன் சூட்டிங் முடித்து வீட்டுக்கு வருவார் எனக் கூறி ஐயப்பனை நேரில் சந்திக்க விடாமல் செய்தது.


Click it and Unblock the Notifications











