உயிருக்கு மேலாக காதலித்த கணவன்.. திருமண நாளுக்கு முன்பே உயிரைவிட்ட சீரியல் நடிகை.. கடைசி வீடியோ!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் நடிகை சுபாஷினி சுப்பிரமணியம் போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 36. கணவரை உயிருக்கு உயிராக காதலிக்கும் இவர் திருமண நாளுக்கு முன்பே உயிரிழந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஸ்ரீலங்கா நாட்டைச் சேர்ந்த நடிகை சுபாஷினி சுப்பிரமணியம் பெங்களூரில் தனது கணவர் பிப்பினுடன் வசித்து வந்தார். ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருவதால், படப்பிடிப்புக்காக போரூரை அடுத்த ஐய்யப்பன்தாங்கலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
நடிகை தற்கொலை: இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப்ரல் 6ந் தேதி) கணவர் பிப்பினுடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறி உள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை சுபாஷினி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐயப்பன்தாங்கல் போலீசார் நடிகையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நடிகை சுபாஷினியின் உடல் அவரின் சொந்த ஊரான பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிற்பகல் 3 மணி அளவில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

கடைசி வீடியோ: நடிகை சுவாஷினிக்கு கடந்த கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்பின் சந்திரா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. பிப்பினை பெற்றோருக்கு பிடித்து போக மூன்று மாதத்திலேயே உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. அவரை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என்ன பத்தியும் அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால்,திருமணம் நடந்துவிட்டதால், இருவரும் சேர்ந்து வாழ தொடங்கி இப்போ இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். எங்களை பார்ப்பவர்கள் அரேஞ்ச் மேரேஜ்னு சொல்ல மாட்டாங்க, லவ் மேரேஜ்னு தான் சொல்லுவாங்க அப்படி ஒரு சந்தோஷமான வாழ்க்கை நான் வாழ்த்து கொண்டு இருக்கிறேன் முதலாமாண்டு திருமண நாளில் மகிழ்ச்சியாக சொன்ன சுவாஷினி, உருகி உருகி உயிருக்கு உயிராக காதலித்த காதல் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.திருமண நாள் ஏப்ரல் 21ந் தேதி வர இருக்கும் நிலையில் தற்போது காதல் கணவரை விட்டு சென்றது தான் வேதனையின் உச்சம். இன்ஸ்டாகிராமில் அவர் கணவரை பற்றி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











