குரோர்பதி கேம் ஷோவில் ரூ.7 கோடி வென்ற டெல்லி சகோதரர்கள்

By Mayura Akilan

மும்பை: கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் முதல் முறையாக டெல்லி சகோதரர்கள்கள் ரூ.7 கோடி வென்றுள்ளனர். அவர்களுக்கு பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘கோன் பனேகா குரோர் பதி' டிவி கேம்ஷோவை நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் ‘சீசன் - 8' தனியார் சேனலில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் பரிசு ரூ.1 கோடியில் இருந்து படிப்படியாக தற்போது ரூ.7 கோடியாக உயர்ந்துள்ளது.

KBC gets its first Rs 7 crore winner in two brothers

இந்நிலையில் கடந்த வார நிகழ்ச்சியில் டெல்லியைச் சேர்ந்த அச்சின் (28), சர்தாக் நருலா (23) சகோதரர்கள் பல்வேறு துறைகளில் இருந்து கேட்கப்பட்ட 14 கடினமான கேள்விகளுக்கும், 4 லைஃப்லைன்கள் உதவியுடன் சரியான விடை அளித்தனர்.

இதன் மூலம் அவர்கள் அதிகபட்ச பரிசுத் தொகையான ரூ.7 கோடியை வென்றனர். இத்தொகை இந்தியாவில் வேறு எந்த சேனல் கேம் ஷோவிலும் இதுவரை வழங்கப்படாத அதிகபட்ச பரிசுத் தொகையாகும்.

பரிசு வென்ற சகோதரர்களை வாழ்த்தி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே இவர்கள் போட்டியை அணுகிய விதம் மற்றவர் களுக்கு எடுத்துக் காட்டாக திகழக்கூடியது என்று அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X