twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு கல்யாணம் ஆயிருச்சு… ஆனாலும் உங்களை ரொம்ப பிடிக்கும்: ஒரு நேரடி ஒளிபரப்பு அனுபவம்

    By Mayura Akilan
    |

    குட்டிக் குட்டி சேனல்கள் தொடங்கி பெரிய சேனல்கள் வரை இன்றைக்கு நேரடி ஒளிபரப்புகின்றனர். அதிகாலை தொடங்கி நள்ளிரவுவரை யாராவது ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

    முன்பெல்லாம் நேயர் விருப்பத்திற்கு15 பைசா அஞ்சல் அட்டையில் பிடித்த பாடலை எழுதிப்போட்டு வானொலியில் நம்முடைய பெயரை சொல்லுவார்களா என்பதற்காகவே விவிதபாரதி கேட்ட காலம் மலையேறிவிட்டது.

    நேரடியாக பேச்சுதான்

    நேரடியாக பேச்சுதான்

    சன் டிவியில் வியாழக்கிழமைகளில் பெப்சி உங்கள் சாய்ஸ் உமாவிடம் பேச ஆண்டுக்கணக்கில் தவமிருந்தவர்கள் இருக்கின்றனர்.

    ரொம்ப வருஷமா ட்ரை பண்றேன்

    ரொம்ப வருஷமா ட்ரை பண்றேன்

    தப்பித்தவறி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் லைன் கிடைத்த புண்ணியவான்கள் சொல்லுவது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கும். நானும் ரொம்ப வருஷமா உங்களுக்கு ட்ரை பண்றேன். இப்பத்தான் நீங்க கிடைச்சீங்க என்பதுதான் அந்த உலகமகா டயலாக்.

    தினசரி போன்தான்

    தினசரி போன்தான்

    தனியாக இசைச் சேனல்கள் ஆரம்பித்த பின்னர் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை யாராவது யாருடனாவது பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

    டிவி வால்யூம் கம்மி பண்ணுங்க

    டிவி வால்யூம் கம்மி பண்ணுங்க

    லைன் கிடைத்த சந்தோசத்தில் குரலை டிவியில் கேட்பதற்காக அதிக சவுண்ட் வைத்து தொகுப்பாளர்களை அச்சுறுத்தும் புண்ணியவான்களும் இருக்கின்றனர். ஹலோ டிவி வால்யூம் கம்மி பண்ணுங்க... அப்பத்தான் நான் உங்க கூட பேசுவேன் என்று செல்லமாய் கோபித்துக்கொள்ளும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    உங்கள ரொம்ப பிடிக்கும்

    உங்கள ரொம்ப பிடிக்கும்

    காலை 9 மணிக்கு கணவர் அலுவலகம் போகும் அவசரத்தில் இருந்தாலும் சன் மியூசிக் சேனலில் வரும் சுடச்சுட நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆவலாய் இருக்கிறார் ஒரு பெண் நேயர். அவசர அவசரமாக போன் போட்டதில் லைன் கிடைத்து விட்டது. அந்த நேயருக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. முதல் வார்த்தையே ஐயோ நீங்கதானா? உங்கள எனக்கு ரொம்ப பிடிக்குங்க. என்பதுதான்.

    திங்கட்கிழமை காலையில

    திங்கட்கிழமை காலையில

    அந்த ஆண் தொகுப்பாளரும் மகிழ்ச்சியோட, எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் என்று கூறிவிட்டு திங்கட்கிழமை காலையில சீக்கிரம் எழுந்திருக்க ஏன் சோம்பேறித்தனம் படுகின்றனர் என்று கேட்கிறார்.

    எனக்கு கல்யாணம் ஆயிருச்சி

    எனக்கு கல்யாணம் ஆயிருச்சி

    அதை எல்லாம் அந்த நேயர் கவனித்தது போல தெரியவில்லை. நான் 6 மணிக்கெல்லாம் எழுந்திருச்சிருவேன். பாப்பாவை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு.... எனக்கு கல்யாணம் ஆயிருச்சு ஆனாலும் உங்களை பார்க்க 9 மணிக்கு டிவி முன்னாடி உட்கார்ந்திடுவேன் என்கிறார்.

    கணவருக்கு சாப்பாடு போடுவீங்களா?

    கணவருக்கு சாப்பாடு போடுவீங்களா?

    அதற்கு தொகுப்பாளரோ, பாப்பாவை ஸ்கூலுக்கு அனுப்புவீங்க சரி, உங்க கணவர் ஆபிஸ் போக டிபன் குடுப்பீங்களா இல்லையா என்று கேட்டவுடன் தான் அந்த நேயருக்கு அடுப்பில் தோசையை ஊற்றியது நினைவுக்கு வந்திருக்கும் போல படக்கென்று இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இன்னும் எத்தனை பேர் வீட்ல

    இன்னும் எத்தனை பேர் வீட்ல

    சீரியல் பார்க்கும் ஜோரில்தான் வீட்டில் வேலை செய்வதற்கு சிரமப்படுவார்கள் இல்லத்தரசிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். காலை நேரத்தில் அலுவலகத்திற்கு போகும் அவசரத்தில் கூட கவனிக்காமல் பேசும் நேயர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு ட்ரை செய்யும் குட்டீஸ் நேயர்களும் இருக்கின்றனர். இந்த நேரடி ஒளிபரப்பு மூலம் இன்னும் எத்தனை பேர் வீட்டில் எது எது கருகப்போகுதே தெரியலையே?.

    English summary
    By asking our favourites through post cards are over. Now calling the channels on mobile is the latest trend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X