பிக் பாஸ் வீட்டில் கீர்த்தி சுரேஷ்.. ரிவால்வர் ரீட்டா கதையையே சொல்லிட்டாங்களே.. செம புரொமோ!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் அணிவகுத்து வந்து தங்களது படங்களின் புரொமோஷன்களை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடிகர் கவின் தனது மாஸ்க் படத்தின் புரொமோஷனுக்காக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து ரசிகர்களையும் பிக் பாஸ் போட்டியாளர்களையும் சர்ப்ரைஸ் ஆக்கியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த கிரேஸ் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், சற்றே டல் அடித்து வருகிறது என ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

Keerthy Suresh enters Bigg Boss Tamil 9 house for promoting her Revolver Rita movie
Photo Credit:

மேலும், விஜய் சேதுபதியே போட்டியாளர்களுடன் சரிக்கு சமமாக இறங்கி சண்டை போடுகிறார் என்றும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து வருவதால், அந்த நிகழ்ச்சிக்கு சென்று சினிமா பிரபலங்கள் புரொமோஷன்களை செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் கீர்த்தி சுரேஷ்: வாட்டர்மெலன் திவாகர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபடு வருகின்றன. கடந்த வாரம் கவின் மாஸ்க் படத்தை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து புரொமோஷன் செய்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து தனது புதிய படமான ரிவால்வர் ரீட்டா படத்தை புரொமோட் செய்துள்ளார்.

ரிவால்வர் ரீட்டா கதை: ஜெகதீஷ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. டார்க் காமெடி படமாக ரிவால்வர் ரீட்டா உருவாகி இருக்கிறது என்றும் இந்த படம் 24 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்து படு ஜாலியாக உருவாக்கப்பட்ட படம் என கீர்த்தி சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் ரிவால்வர் ரீட்டா பற்றிய கதையை ஓபன் செய்துள்ளார்.

வெற்றி கிடைக்குமா?: கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் சிறப்பாக இருந்த நிலையிலும், திரையரங்குகளில் வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. பாலிவுட்டில் அட்லி தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பேபி ஜான் படமும் ஃப்ளாப் ஆகிவிட்டது. இந்நிலையில், ரிவால்வர் ரீட்டா திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு வெற்றிப் படமாக அமைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X