புதுயுகம் டிவியில் கேள்வி பாதி கிண்டல் பாதி
'புதுயுகம் தொலைக்காட்சி'யில் "கேள்வி பாதி கிண்டல் பாதி'" நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு மறுதினம் 04.00 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.
கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் பஞ்சமில்லாத வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதன் தொகுப்பாளர்களான முத்துவும், ரஞ்சனியும், கிண்டலோடு உரையாடுகின்றனர்.
திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாது அல்லாமல் மற்ற எல்லா துறை சார்ந்த பிரபலங்களையும் நிகழ்ச்சியில் வரவழைத்து அவர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறார்கள்.

பிரபலங்களில் பர்சனல்
வெறும் நேர்காணலாக மட்டும் இல்லாமல், அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையில் நகைச்சுவையாக நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், மற்றும் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்த இன்னல்கள் போன்ற விசயங்களை சந்தோசமாகவும் வெளிப்படையாகவும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கிண்டலும் கேலியும்
யாருடைய மனதையும் புண்படுத்தாதவாறு கிண்டல்களுக்கும், கேலிகளும் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு தொலைகாட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

சுவாரஸ்ய விளையாட்டுக்கள்
இந்த அரை மணி நேர நிகழ்ச்சியில் பல சொல் விளையாட்டுகளும், கோமாளித்தனமான விளையாட்டுக்களை சுவாரஸ்யத்துடன் விளையாட வைப்பதும் இதன் சிறப்பம்சம்.

ரசிக்கும் பிரபலங்கள்
தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து அவர்களை கலாப்பதும், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அதனை ரொம்பவே ரசித்து செய்வதும் இந்த நிகழ்ச்சியின் கூடுதல் பலமாகவே அமைந்துள்ளது.

பிரபலங்களின் குறும்புகள்
அதுமட்டும் அல்லாமல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் வாழ்க்கையில் அவர்கள் மொக்கை வாங்கிய விஷயங்களையும், சிறு வயதில் செய்த சின்ன சின்ன குறும்புத்தனங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில்

சுவாரஸ்ய அரங்கம்
அரை மணி நேரம் எப்படி கழிந்தது என்று தெரியாத வகையில் சுவாரஸ்யமாக இந்த நிகழ்ச்சி வடிவமைத்து வழங்கப்பட்டு வருகிறது. ‘கேள்வி பாதி கிண்டல் பாதி' நிகழ்ச்சி. அரங்க அமைப்பில் இருந்து அமரும் நாற்காலி வரை சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











