ஐஸ்வர்யாவை கழுவி ஊத்திய சதீஷ் இப்போது பிக்பாஸ் வீட்டில்…!என்ன நடக்கப்போவுதோ தெரியலியே…!
கஜினிகாந்த் படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
Recommended Video

சென்னை: கஜினிகாந்த் பட புரமோஷனுக்காக படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பிக்பாஸ் வீடு கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. ஐஸ்வர்யா தத்தா வீட்டின் ராணியாக நியமிக்கப்பட்டவுடன் பல்வேறு அடாவடித்தனங்களை செய்ய ஆரம்பித்தார்.

சாதுவாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த பொன்னம்பலம் ஆத்திரமடைந்து ஐஸ்வர்யா தத்தாவை தூக்கி நீச்சல் குளத்தில் வீசினார். அதன்பிறகு ஐஸ்வர்யா கன்ஃபெஷன் ரூமுக்குச் சென்று பிக்பாஸிடம் முறையிட்டார்.
ஆனால், நீங்கள் செய்தது சரி, ராணி கதாப்பாத்திரத்திலிருந்து வெளியே வர முயற்சி செய்யுங்கள் எனக் கூறி பிக்பாஸ் கதவை சாத்திக்கொண்டார். இந்த நிலையில் நடிகர் ஆர்யா பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் புரமோ வெளியாகியுள்ளது.
நடிகர் ஆர்யாவின் சாயிஷா நடித்துள்ள கஜினிகாந்த் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
ஆர்யா, சதீஷ், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருடன் தொகுப்பாளர் திவ்ய தர்ஷினியும் உள்ளே சென்றுள்ளார். ஒருபக்கம் கமல் ஹாசன் விஸ்வரூபம் திரைப்பட புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அடாவடித்தனம் செய்த ஐஸ்வர்யாவை பொணமா நடிக்க சொன்னா செத்துடுவாளா? பைத்தியம் பிடிச்ச லூசு என்றெல்லாம் என கோபமாக ட்விட்டரில் கேட்டிருந்தார் சதீஷ். இப்போது அவரை நேரில் பார்த்துள்ளார். என்ன சொல்லியிருப்பார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் கஜினிகாந்த் திரைப்படக்குழு தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளது. ஹ்ம்ம்ம் நடத்துங்க!


Click it and Unblock the Notifications











