ரஜினி, கமல்… நினைவுகள்: ராதிகா, ஸ்ரீப்ரியா, கவுதமி, குஷ்பு
ரஜினிகாந்த் சூப்பரா காபி போடுவார்... கமல் அதிகமாக கலாட்டா செய்வார்... காமெடியும் கமலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று ரஜினி கமலுடன் இணைந்து நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் முன்னாள் கதாநாயகிகள் ஸ்ரீப்ரியா, ராதிகா.
விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கடந்த சிலவாரங்களுக்கு முன் பங்கேற்ற ஸ்ரீப்ரியா, ராதிகா உடனான நட்பு, ரஜினி, கமலுடன் நடித்த அனுபவங்களை தொலைக்காட்சி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அதேபோல நடிகை ராதிகாவும் ஸ்ரீப்ரியா உடனான நீண்ட நாளைய நட்பு, கதாநாயகியாக நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ரஜினியின் எளிமை
ஸ்ரீப்ரியா ரஜினியுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடைய எளிமையான பழகும் தன்மை தனக்கும் மிகவும் பிடிக்கும் என்றார். ரஜினி வீட்டிற்கு ராதிகா உடன் போயிருந்த போது அவருடைய கையினால் காபி போட்டு கொடுத்தார் என்றார்.

கமலின் கலாட்டா
படப்பிடிப்பு அரங்கில் கமல்ஹாசன் கலாட்டா செய்துகொண்டே இருப்பார். அவர் செய்த காமெடி கலாட்டாக்கள் இன்றைக்கும் மறக்கமுடியாதவை என்றார் ராதிகா.

கொஞ்சம் நடிங்களேன்
இந்நாள் கதாநாயகிகள் பெரும்பாலோனோருக்கு நடிக்கவே தெரியவில்லை என்று குறைபட்டுக் கொண்டனர் ராதிகாவும், ஸ்ரீப்ரியாவும்.

சிரஞ்சீவியுடன் நட்பு
எண்பதுகளில் நடித்த போது சிரஞ்சீவியுடன் வாடா போடா என்று கூப்பிடும் அளவிற்கு நட்பு என்றார் ராதிகா. அப்போது குறுக்கிட்ட ஸ்ரீப்ரியா என்னை வாடா போடா என்று கூப்பிட மாட்டியா என்று கோபித்துக் கொண்டார்.

கவுதமி-குஷ்பு
இதேபோன்று ரஜினி கமலுடன் நடித்த இரண்டு பிரபல நாயகிகள் கவுதமி, குஷ்பு ஆகியோர் தங்களின் சினிமா உலக அனுபவங்களை வரும் வாரம் காபி வித் டிடி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்கின்றனர்.

கமல் ஹாசன்-கவுதமி
உலகநாயகன் கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன் உள்ளிட்ட படங்களில் நடித்த கவுதமி, இப்போது லிவ் இன் பார்ட்னராக கமலுடன் வாழ்ந்து வருகிறார். சினிமா தவிர்த்து தற்போதைய வாழ்க்கையும் அவர் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளாராம்.

ரஜினிகாந்த்-குஷ்பு
தொண்ணூறுகளில் ரஜினி, கமலுடன் இணைந்து நடித்தவர் குஷ்பு. ரஜினி கட்சி தொடங்கினால் குஷ்புதான் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது இயக்குநர் சுந்தர்.சி ஐ திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகவிட்டார். சினிமாவை தவிர்த்து விட்டு சீரியல், அரசியல் என பிஸியாக உள்ளார். இவரும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை, சினிமா, அரசியல் என பகிர்ந்து கொள்கிறார்.

குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சி
குஷ்பு, கவுதமி சிறப்பு பேட்டி ஜனவரி 26ம் தேதி குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











