குஷ்பூ நடிப்பில் அடுத்த சீரியல் ரெடி... பூஜையும் போட்டாச்சு...என்ன ரோல் தெரியுமா?

சென்னை : நடிகை குஷ்பூ அடுத்தடுத்த புராஜக்ட்களில் தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர், பெரியத்திரை மற்றும் சின்னத்திரை நடிகை, ரியாலிட்டி ஷோக்கள் என்று அவர் தொடர்ந்து பிசியாக காணப்படுகிறார்.

சன் டிவியில் லஷ்மி ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் அடுத்த சீரியலை துவங்கியுள்ளார்.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ சிறப்பான நடிகையாக 90களில் பல இளைஞர்களின் தூக்கத்தை தொலைக்க காரணமாக இருந்தவர். முன்னணி நடிகர்களுடன் இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று இவரை முன்னணி நடிகையாக மாற்றியது.

ரசிகர்களை கவர்ந்த குஷ்பூ

ரசிகர்களை கவர்ந்த குஷ்பூ

ரசிகர்களுக்கு அந்த கால கட்டத்தில் கொழுக் மொழுக் நடிகைகளையே மிகவும் பிடித்தது. அந்த விருப்பத்தை பூர்த்தி செய்தார் குஷ்பூ. ஒரு கட்டத்தில் திருமணம் முடித்து தமிழக மருமகளாக செட்டில் ஆன குஷ்பூ, சிறந்த குடும்பத்தலைவியாக மட்டுமின்றி சிறப்பான தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

சிறந்த தயாரிப்பாளர்

சிறந்த தயாரிப்பாளர்

தன்னுடைய கணவர் சுந்தர் சியுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். அரண்மனை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இவர்களது அவ்னி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. தொடர்ந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி வரும் குஷ்பூ சின்னத்திரையிலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக உள்ளார்.

சின்னத்திரை தொடர்கள்

சின்னத்திரை தொடர்கள்

இவர்களது தயாரிப்பில் சிறப்பான பல தொடர்கள் மக்களின் மனங்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. மேலும் இந்தத் தொடர்களில் முக்கியமான கேரக்டர்களில் நடிப்பதன்மூலம் ரசிகர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார் குஷ்பூ.

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்தடுத்த தொடர்கள்

சின்ன சின்ன ஆசை, அர்த்தமுள்ள உறவுகள், மருமகள், குங்குமம், கல்கி, நந்தினி உள்ளிட்ட தொடர்களில் கலக்கிய குஷ்பூ நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான லஷ்மி ஸ்டோர்ஸ் சீரியலும் கலக்கல் ரகம்தான். இதில் பணக்கார வீட்டு மருமகளாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான இயல்புமூலம் தன்னுடைய குடும்ப உறவுகளை மட்டுமின்றி ரசிகர்களையும் கவர்ந்தார்.

புதிய தொடர் மீரா

புதிய தொடர் மீரா

இந்நிலையில் தற்போது புதிய தொடரை துவக்கியுள்ளார் குஷ்பூ. இந்தத் தொடரின் கதையை அவரே எழுதியுள்ளார். இந்த தொடரின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. மீரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரின் பூஜை புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

விரைவில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பு

விரைவில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பு

விரைவில் கலர்ஸ் டிவி தமிழில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் தனக்கு வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கலர்ஸ் டிவியில் அவர் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X