கில் தெம் வித் யுவர் சக்சஸ்.. முதல்வனாக மாறிய விஜய்.. கொண்டாடி தீர்த்த பிக் பாஸ் பிரபலம்!
சென்னை: விஜய்க்கு இந்தளவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என விஜய் நம்பியதால் தான் தவெகவை தொடங்கி தமிழ்நாட்டில் 233 இடங்களில் வேட்பாளரை நிறுத்தி இன்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆதிக்கம் செலுத்தி மாஸ் காட்டி வருகிறார்.
உங்க ஏரியா.. எங்க ஏரியா.. ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லி டா என்றும் பார்த்திபனாக இருந்தால் 10 பேர் போதும், அதுவே லியோவாக இருந்தால் மொத்த ஊரும் போனாலும் பத்தாது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களுக்குப் போட்டியாக பல சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்களும் விஜய்யின் வெற்றியை விசில் அடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
Kill them with your Success: விஜய் ஒரு கூத்தாடி என்றும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்றும் தவெகவினர் தற்குறிகள் என ஏகப்பட்ட கடுமையான வசைகளை திமுக அள்ளி வீசிய நிலையில், தற்போது விஜய் அதற்கு பதிலடியாக "Kill them with your Success... Bury them with your Rise 🔥 The Real Phoenix @actorvijay" என பிக் பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டி ட்வீட் போட்டுள்ளார்.
ஜூலியை எங்கே காணோம்: விஜய் பெரம்பூரில் தோற்க வேண்டும் என தனி ஒரு மனுஷியாக போராடிய கிட்னி திருடி ஜூலியை எங்காவது பார்த்தீங்களா என சோஷியல் மீடியாவில் தவெகவை சேர்ந்த பெண்கள் ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டனர். விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி என போட்டியிட்ட 2 இடங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், உங்க ஸ்டாலின் சார் தான் கொளத்தூரிலேயே தோற்று மண்ணைக் கவ்வி விட்டார் என கலாய்த்து வருகின்றனர்.
அடுத்த எம்ஜிஆர்: சினிமாவில் எம்ஜிஆரை போல சாதித்த விஜய் தற்போது முதல் முறையாக அரசியல் களத்தில் போட்டியிட்ட நிலையிலும், பல இடங்களில் வென்று வெற்றி வாகை சூடியுள்ளார். அடுத்த எம்ஜிஆர் இனிமேல் தமிழ்நாட்டுக்கு விஜய் தான் என்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் ஆட்சியை யாராலும் தடுக்க முடியாது என கூற ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications