கூமாப்பட்டி தங்கபாண்டியுடன் இலங்கை பீச்சில் சிறகடிக்கும் சாந்தினி.. இவங்க அலப்பறைக்கு அளவே இல்ல போல

இலங்கை: எங்க போனாலும் நாங்க இப்படித்தான் என்பது போல, ஜீ தமிழின் கில்லாடி ஜோடி நட்சத்திரங்கள் கூமாப்பட்டி தங்க பாண்டி, சாந்தினியும் இப்போது இலங்கை கடற்கரையில் ஜாலியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிறகடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் இப்போது இவர்களின் சிறகடிக்கும் வீடியோக்கள் தான் செம ட்ரெண்டிங். இவர்களின் அலப்பறையை பார்த்த ரசிகர்கள், "இவங்க லூட்டிக்கு அளவே இல்லையா?" என ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷூட்டிங் போனா சுற்ற மாட்டோமா? என்பது போல தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கில்லாடி ஜோடி' நிகழ்ச்சியின் ஸ்பெஷல் படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் இலங்கை சென்றுள்ளனர். கேமரா முன்னால் டாஸ்க் முடித்த கையோடு, கூமாப்பட்டி தங்கபாண்டி தனது பாணியில் சாந்தினியுடன் இணைந்து அடிக்கும் லூட்டிகள் தனி ரகம். இது தொடர்பாக இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Killadi Jodi s Sri Lankan Diaries Koomapatti Thangapandi and Chandini Video At Sri Lanka Beach

இருவரும் ஜீ தமிழில் முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியான சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் தனி வரவேற்பைப் பெற்ற ஜோடியாக விளங்கினர். இவர்களது ஆன் ஸ்கீர்ன் கெமஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க்-அவுட் ஆனதுதான் ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி பிரபலமாக காரணமே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராகவும் இவர்கள் மாறினார்கள்.

கில்லாடி ஜோடி: இது ஒரு புறம் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் நிகழ்ச்சியைக் கடந்தும் நல்ல நட்புடன் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஏதோ மாமன் மகன், அத்தை மகள் உறவு போல இருவரும் மாறி மாறி கலாய்த்துக் கொள்வது, ஒருவருக்காக மற்றொருவர் நலம் விரும்புவது, கிண்டலடிப்பது என லூட்டி அடித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'கில்லாடி ஜோடி' நிகழ்ச்சியின் ஸ்பெஷல் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இலங்கை சென்றுள்ளனர்.

ஜாலி கமெண்ட்: அங்கிருந்து அவர்கள் பகிர்ந்துள்ள வீடியோவில், " நாங்கள் கில்லாடி ஜோடி நிகழ்ச்சிக்காக இலங்கை வந்துள்ளோம் முதல் டாஸ்க்கே தண்ணீர் டாஸ்க். மிகவும் கடினமாக இருந்தது என்று சாந்தினி கூறுகிறார். அதே நேரத்தில் கூமாப்பட்டி தங்கபாண்டி கூறும்போது, இலங்கை கடல் நமது மெரினா கடல் போல உள்ளது. அருகில் எனது கனவுக் கன்னி சாந்தினி இருக்கிறார்" என்று கிண்டலாக பேசி உள்ளார். இவர்களின் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X