King Kong: ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ்.. மறக்கவே முடியாத படம்!
சென்னை: நடிகர் கிங் காங் ரஜினியுடன் அதிசய பிறவி படத்தில் நடித்தன் மூலம் பிரபலமான கிங்காங், அதைத் தொடர்ந்து, சுறா, போக்கிரி, வாத்தியார், கருப்பசாமி குத்தகைக்காரார், இந்திரலோகத்தில் நா அழகப்பன், முனியாண்டி விலங்கியல் ஆகிய படத்தில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார். இவர் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் பத்திரிக்கை வைத்து அழைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகர் கிங் காங் மகள் கீர்த்தனா மற்றும் நவீனுக்கு கடந்த மாதம் 10ந் தேதி திருமணம் பெசன்ட் நகர் ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. சென்னை அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் MPK மஹாலில் திருமணம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அதே போல திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் விஷால், டி ராஜேந்தர் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த கையோடு பல யூடியூப் சேனலுக்கு கிங் காங் பேட்டி அளித்து வருகிறார்.
நடிகர் கிங் காங்: அதில், என் வீட்டில் நடக்கும் முதல் திருமணம் என்பதால், என் மகளின் திருமணத்துக்கு, பிரபலங்களுக்கு பத்திரிகை வைக்க அழைக்க விரும்பினேன்.மொய்ப் பணத்துக்காக, அனைவருக்கும் பத்திரிக்கை வைக்கவில்வைல. அப்படி காசு வாங்குபவராக இருந்தால், முக்கிய நபர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களுக்கு மட்டும் பத்திரிகை வைத்திருப்பேன். அவர்கள் தரும் பணத்தையும் பெற்று கொண்டு இருப்பேன். அனைவரும் வந்து என் மகளை அசீர்வாதம் செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் ஆசைப்பட்டது போலவே பலரும் வந்து இருந்தார்கள். இன்னும் பல நடிகர் நடிகைகள் வந்து இருந்தார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால்,திரும்பி சென்றுவிட்டார்க என்றார்.

திருமணமே வேண்டாம்: தொடர்ந்து தனது அம்மா குறித்து பேசிய கிங் காங், அம்மாதான் எனக்கு எல்லாமே, மாற்று திறனாளியாக குழந்தை பிறந்து விட்டால், பலரும் அந்த குழந்தையை ஒதுக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால், என் அம்மா எனக்காக பலவிதமான கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறார்கள். நான் வளர்ந்த பிறகு, எனக்கு திருமணமே வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னேன். ஆனால், நான் போன பிறகு உனக்கு என்று சொல்லிக் கொள்ள ஒரு குடும்ப இருக்க வேண்டும் என்றார். அதன் பிறகு தான், பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். எனது மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் ஆனால், அதற்குள இறந்துவிட்டார்கள் என்றார்.
மறக்கவே முடியாது: பின், சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசிய கிங் காங், அந்த படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. மும்பையில் இருந்து வந்து சென்னையில் தான் ஆடிஷன் வெச்சாங்க, நான் இந்தி படம் என்பதால் நார்மலாக சென்றுவிட்டேன். அங்கு போன பிறகு தான் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கிறார்கள் என்று சொன்னார்கள். என் சைஸ்ல என்ன மாதிரியே பல பேர் வந்து இருந்தார்கள். அனைவரையும் நடித்து காட்ட சொன்னார்கள். நானும் நடித்து காட்டிவிட்டு வந்துவிட்டேன். அதன் பிறகு சில மாதம் கழித்து செலெக் ஆகிட்டீங்க என்று எனக்கு போன் வந்தது.அதைக் கேட்டு நான் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன் என்று கிங் காங் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











