kizhakku cheemayile: “ஆத்தங்கரை மரமே” பாடலில் வந்த பேச்சியா இது.. மார்டன் உடையில் செம மோட்டிவேஷன்

சென்னை: கிராமத்து கதை அம்சத்தை கொண்ட "கிழக்கு சீமையிலே" திரைப்படத்தில் "ஆத்தங்கரை மரமே அதில் உறங்கும் கிளியே" என்ற பாடலில் பேச்சியம்மா கேரக்டரில் நடித்த ருத்ரா தற்போது மார்டன் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிறது.

வயது என்பது ஒரு நம்பர் தான் என்பதை ருத்ரா நிரூபித்திருக்கிறார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கதான் எங்களுடைய மோட்டிவேஷன் என்று கூறுகின்றனர்.

kizhakku cheemayile Actress Rudra latest photos and fans reaction

அதே நேரத்தில் இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவருடைய நிலைமை என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பல ரசிகர்களுக்கு தங்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் இப்போதைய நிலைமையை பார்க்கும்போது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அவங்களா இவங்க என்று சொல்ற மாதிரி இருக்கும். அந்த மாதிரி தான் தற்போது கிழக்கு சீமை நடிகை ருத்ரா புகைப்படம் வெளியாகி இருக்கிறது. நடிகை ருத்ரா தமிழை விடவும் அதிகமான மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்

kizhakku cheemayile Actress Rudra latest photos and fans reaction

நடிகர் ருத்ராவின் சொந்த பெயர் அஸ்வினி தானாம். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சமீபத்தில் தமிழ் திரைப்படங்களில் அதிகமாக இவரை காண முடிவதில்லை. ருத்ரா ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது மலையாள பத்திரிகைகளில் தன்னுடைய நண்பர்களோடு மாடலிங் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

அதைப் பார்த்தது தான் இயக்குனர் பாரதிராஜா இவருக்கு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தாராம். அந்த திரைப்படத்தில் மரிக்கொழுந்து என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் அடுத்தடுத்த சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழில் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் பேச்சியம்மா கேரக்டரில் நடித்திருக்கிறார்.

kizhakku cheemayile Actress Rudra latest photos and fans reaction

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மலையாளம் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். அதிலும் இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் டான்ஸர் ஆகவும் இருந்திருக்கிறார். முன்னணி நடிகையாக இருக்கும் போது இவருக்கு திருமணம் முடிந்து பிறகு சிங்கப்பூருக்கு சென்று விட்டாராம். பிறகு சில வருடங்கள் கழித்து சில குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக இவர் 2021 ஆம் ஆண்டு எழுத்தர் அலமேலு மங்கை, ஏஞ்சல் காலனி என்று குறும்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன சின்ன ஆசை- நிறங்கள், நிம்மதி உங்கள் சாய்ஸ், ராஜராஜேஸ்வரி, மகராசி என பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் எடுத்த மார்டன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

kizhakku cheemayile Actress Rudra latest photos and fans reaction

இதை பார்த்த ரசிகர்கள் இவர் இன்னும் அப்படியே இளமை மாறாமல் இருக்கிறாரே? இவருக்கு மட்டும் வயது ஏறவில்லையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிலும் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் பார்க்கும்போது பாவாடை தாவணியில் கலக்கி இருப்பார். ஆனால் இப்போதும் அதே அழகோடு இருக்கிறார்..! இது பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X