Kizhaku vasal serial:கிழக்கு வாசல் கிராமத்துல எந்த நேரமும் திக் திக்!

சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் எந்த நேரமும் திக் திக் காட்சிகள் மிரள வைக்குது. தெலுங்கு டப்பிங் சீரியலில் விரோதம், வன்மம், குரோதம்னு தாண்டவம் விரிச்சு ஆடுது.

தேவராஜ், நாகப்பன் இரண்டு பேரும் கிராமத்தின் இரு துருவங்கள் மாதிரி. அந்த ஊர் மீனவர்களும் இவர்களால் இரண்டு பிரிவினர்களாக பிரிந்து கிடக்கிறார்கள்.

தேவராஜ், இனி வன்மம் வேண்டாம் சமரசமாக போகலாம்னு பேச வந்தாலும், தேவராஜ் ஆட்கள், இதைக் கெடுத்து நாகப்பனின் ஆட்களை கொல்கிறார்கள்.

நாகப்பன் மகள் யாழினி

நாகப்பன் மகள் யாழினி

தேவராஜ் செய்வதுதான் அடாவடித்தனம் என்று தெரிந்தாலும், அந்த ஊர் போலீசால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.ஒரு நாள் நாகப்பனின் மகள் யாழினி தேவராஜின் வீட்டுக்கே சென்று, தைரியமாக நியாயத்தை பேசிட்டு வர. தேவராஜ் மனசு மாறி விடுகிறது. இனி தேவராஜுடன் எந்த பிரச்சனையும் வேண்டாம். அவன் என் பழைய நண்பன். அன்றைக்கும் நண்பன்தானேனு சொல்லிட்டு, சமரசம் பேசலாம்னு போகும் போதுதான்.அசம்பாவிதம் நேர்ந்து தேவராஜை நம்ப முடியாமல் போய்விடுகிறது.

நாகப்பன் பெண்களுக்கு பரிசு

நாகப்பன் பெண்களுக்கு பரிசு

நாகப்பன் இரண்டு பெண்களுக்கும் பிறந்த நாள் வருது. அதனால், அம்மனுக்கு அதிகாலையில் சாத்தும் ரத்த சந்தனத்தை பரிசாக மகள்களுக்குத் தர வேண்டும் என்று அதிகாலை புறப்பட்டு,கடல் ஓரத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு தனியா போறார் நாகப்பன். இதைத் தெரிஞ்சுக்கிட்ட, தேவராஜின் வலது கை ராமு, நாகப்பனை எப்படியாவது கொன்று, தான் கடவுளாக மதிக்கும் அண்ணாச்சிக்கு பரிசாகத் தர வேண்டும்னு நினைக்கிறான்.

அண்ணாச்சி தேவராஜ்

அண்ணாச்சி தேவராஜ்

தேவராஜ் அண்ணாச்சி நாளைக்கு நண்பனை சந்திச்சு, அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி நமக்குள் விரோதம், பகை வேண்டாம் என்றும் அவனை கட்டித் தழுவி சொல்லி ஆனந்தம் அடைய வேண்டும் என்றும் நினைத்து ஆனந்தத்தில் தூங்காமல் இருக்கார். இந்த நேரத்தில்தான் நாகப்பன் தனியாக செல்வதை பயன்படுத்திகிட்டு தேவராஜின் ஆள் ராமு நாகப்பனைக் கொல்ல திட்டம் போடறான்.

வழியில் ராமு

வழியில் ராமு

நாகப்பன் ஜீப்பில் செல்லும் வழியில், ராமு அடிபட்டு சாகக் கிடப்பவன் போல கிடக்கான். இதைப் பார்த்த நாகப்பன் முதலில் போனாலும், விரோதியானாலும், சாகக் கிடக்கும் போது உயிரைக் காப்பாத்தணும்னு அவனைத் தூக்கி ஜீப்பிலே போட்டுக்கிட்டு கிளம்பறார். உனக்கு ஒண்ணும் ஆகாதுல.. கொஞ்சம் பொறுத்துக்கோ, ஆஸ்பத்திரி வந்துரும்லன்னு சொல்லிகிட்டே ஜீப் ஓட்டறார்.

யாழினி தேடி

யாழினி தேடி

அப்பாவை காணோம்னு மகள் யாழினி தேடிகிட்டு வண்டியில் வர்றா.அதற்குள் ராமு அவரை ஜீப்பில் பின்னாலிருந்து பெரிய கத்தியால் குத்திடறான். நான் நடிச்சேன்..எனக்கு ஒண்ணும் இல்லை. உன்னை கொல்றதுதான் என் நோக்கம்.என் அண்ணாச்சிக்கு இன்னிக்கு உன்னைத்தான் பரிசா தர போறேன்னு சொல்றான். மேல மேல கத்தியல் நாகப்பனை குத்தி காயப் படுத்தறான்.யாழினி பாவம் அப்பாவை அழுதுகிட்டே தேடிகிட்டு வர்றா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X