twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு… புதுயுகம் சமையல் நிகழ்ச்சி

    By Mayura Akilan
    |

    புதுயுகம் தொலைக்கட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை பகல் 1.00 முதல் 1.30 வரை ஒலிபரப்பாகிகொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.

    உணவும் உணவு சார்ந்த வரலாறும்... வரலாறும் வரலாறு சார்ந்த உணவும் ஒரு ஊரின் சிறப்பு உணவுகள், அவ்வூரின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், தெரு ஓர உணவுகள், அது சார்ந்த சுவாரஸ்யமான வரலாற்று பின்னனிகளும் இத்துடன் இணைந்தே வரும். ஒரு உணவு, அதன் வரலாறு, அதன் செய்முறைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது.

    புதிய தலைமுறை டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது புதுயுகம் டிவிக்கு இடம்மாறிவிட்டது.

    உணவின் வரலாறு

    உணவின் வரலாறு

    சமைப்பதும் சாப்பிடுவதும் ஒரு கலை. புராணங்களில்கூட நளபாகத்தையும் நளனையும் நாம் படித்திருக்கிறோம். வெறும் வயிற்றை அடைப்பதல்ல உணவு. மக்களின் பண்பாட்டில் உணவுக்கு முக்கியத்துவம் உண்டு.

    வரலாறுடன் இணைந்த உணவு நம்மை சுற்றியிருக்கும், அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான். நம்மை பற்றி, நம் குடும்பத்தை பற்றி, நம் கோவில்களை பற்றி, நம் ஊரைப் பற்றி, நம்மை ஆள்பவர்களை, அவர்களின் அரசியல் பற்றி என அனைத்து வகை வரலாறும் முக்கியம் தான்.

    ஊரும் உணவும்

    ஊரும் உணவும்

    அந்த வகையில், நாம் உண்ணும் உணவைப் பற்றிய வரலாறும் முக்கியம் தான். பிரதேசமும், ஒவ்வொரு இனமும் தனக்கே உரிய சமையல் கலையை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இடம் பெயரும் உணவுகள்

    இடம் பெயரும் உணவுகள்

    இன்று கால மாற்றத்தால் வெவ்வேறு மண்ணிலிருந்து வெவ்வேறு மண்ணுக்கு இந்தக் கலை வெவ்வேறு கலவையில் போய்க் கொண்டிருக்கிறது. உணவும் உணவு சார்ந்த வரலாறும், வரலாறும் வரலாறு சார்ந்த உணவும்தான்

    கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு. பாரம்பரிய உணவுகளும் சரி, வேறு நாடுகளிலிருந்து இறக்குமதியான உணவுகளும் சரி அவற்றுக்கான கலாசார பின்னணியை சொல்லும் போது ருசிக்கும் உணவின் சுவை இன்னும் அதிகமாக இருக்கிறது.

    அல்வா முதல் பிரியாணி வரை

    அல்வா முதல் பிரியாணி வரை

    திருநெல்வேலி அல்வா முதல், பண்ருட்டி முந்திரி, பலாப்பழம், ஆம்பூர் பிரியாணி வரை உணவு வந்த வரலாற்றினையும், அதன் சுவையையும் சொல்வதோடு, அதை ஊர் மணத்தோடு சமைத்து காண்பிக்கின்றனர்.

    திங்கள் முதல் ஞாயிறு வரை பகல் 1.00 முதல் 1.30 வரை புதுயுகத்தின் அடுப்படி பக்கம் மூக்கை நீட்டுங்கள்.. அதன் பிறகு அங்கேயே உட்கார்ந்துவிடுவீர்கள் என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

    English summary
    Pudhu Yugam Tv telecast cookery show Konjam Soru Konjam Varalaru every day 1 P.M.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X