‘கோலங்கள்‘ ஆதியை ஞாபகம் இருக்கா? அவரது மகனை பாருங்க.. அடுத்த ஹீரோ ரெடி?
சென்னை: ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் போன்ற பல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், 90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்த சீரியல் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பான "கோலங்கள்" தான்.
இந்த தொடருக்கு அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது மட்டுமல்லாமல், அந்த சீரியல் ரீ-டெலிகாஸ்ட் செய்யப்பட்ட போதும் அதே அளவுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் "ஆதி" என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அஜய் கபூர். அவரது நடிப்பு அந்த கதாபாத்திரத்தையும் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

கோலங்கள் ஆதி: சீரியலில் கடுமையான வில்லனாக மிரட்டிய அஜய் கபூர், நிஜ வாழ்க்கையில் அன்பான குடும்பத் தலைவராக வாழ்ந்து வருகிறார். தற்போது அவரது மகன் விசேஷ் பட்டம் பெற்ற தருணத்தின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அஜய் கபூரின் மனைவி நிஷா கபூரும் ஒரு நடிகை ஆவார். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மல்லி" சீரியலில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக "ருத்ர வினை" என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.
மகனின் பட்டம்: அதே சமயம், "கோலங்கள்" சீரியலில் நடித்த நடிகை தேவயானியின் இரண்டாவது மகள் பிரியங்கா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் நிலையில், அதே தொடரில் வில்லனாக நடித்த அஜய் கபூரின் மகன் தற்போது பட்டம் பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியை அஜய் கபூரும் அவரது மனைவி நிஷாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தற்போது சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலை இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராணா கதாபாத்திரத்தில் அஜய் கபூர் வந்து மிரட்டுவார் என ரசிகர்கள் எதிர்த்து இருந்தனர். ஆனால், அந்த ரோலில் நடிகர் அஷ்வின் தக்ஷின் தற்போது நடித்து வருகிறார். இந்த ரோலில் அஜய் கபூர் நடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு


Click it and Unblock the Notifications