புதுயுகம் டிவியில் கோலிவுட் அன்கட்
புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா பற்றிய புத்தம் புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபாகிறது.
ஊடகங்களில் சினிமா பற்றி இல்லாமல் செய்தியே இல்லை. திரைப்படங்கள், நடிகர், நடிகையர்கள், கிசுகிசுக்கள், என பல தகவல்கள் இடம் பெறுகின்றன.
நாளிதழ்கள், வார இதழ்கள், இணையதளங்களில் சினிமாவிற்காகவே குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படுகிறது.
அதேபோல தொலைக்காட்சிகளிலும் திரைப்படம் பற்றிய செய்திகள் இடம் பெறுவது முக்கிய அம்சமாகிவிட்டது.

கோலிவுட் அன்கட்
புதுயுகம் டிவியில் கோலிவுட் அன்கட் என்ற புதிய சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இது முற்றிலும் தமிழ் சினிமா பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சி.

சினிமா நிகழ்ச்சி
அரை மணி நேர நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பற்றிய செய்திகள், விவரமான பேட்டிகள், இசைத்தட்டு வெளியீடு, பத்திரிக்கையாளர் சந்திப்பு இடம் பெறுகிறது.

சினிமா பிரபலங்கள்
திரைப்படங்கள் தொடர்புடைய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் என தமிழ் சினிமா உலகத்தின் பக்கங்களை ரசிகர்களுக்கு தெரிவிக்கிறது.

தகவல் களஞ்சியம்
நேயர்களின் விருப்பமான சினிமா பிரபலங்களைப்பற்றிய அனைத்து விஷயங்களுடன் உங்கள் வீடு தேடி வரும் ஒரு தகவல் களஞ்சியம்.

புதுயுகம் டிவியில்
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு புது யுகம்
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











