Tamil Selvi Serial: கொம்பன் ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டானாமே... இருக்கட்டுமே!

சென்னை:சன் டிவியின் தமிழ்செல்வி சீரியலில் கொம்பன் ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டானாம்... இருக்கட்டுமே, அவனுக்கு என்ன கொம்பா முளைச்சு இருக்கு?

கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டான்னு தமிழ்செல்வி குடும்பமே பயப்படுது. போதாக்குறைக்கு தமிழ்செல்வி இருக்கற இடம் கொம்பனுக்கு தெரிய கூடாதாம்.

அப்படி என்ன கிராமத்துல இந்த காலத்துல பெரிய ரவுடி.? நகரத்திலேயே என்கவுண்டர் எல்லாம் போட்டு, ரவுடிகளை சுட்டு பிடிக்கறாங்க...இந்த காலத்துல கிராமத்துல கொம்பன் தப்பிச்சுட்டானாம்.

டாக்டருக்கு போன் வருது

டாக்டருக்கு போன் வருது

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் இந்த சீரியலில் டாக்டரா நடிக்கறார். இவருக்குத்தான் முதலில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன் வருது. கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டான். அதனால, இந்த விஷயத்தை தமிழ்செல்வி குடும்பத்துக்கு நீங்களே எடுத்து சொல்லி, அவங்களைப் பாதுகாப்பா இருக்க சொல்லுங்கன்னு ஸ்டேஷனில் சொல்றாங்க. சரிங்க சார் நானே நேரில் போயி அந்த குடும்பத்தில் சொல்லிடறேன்னு தமிழ்செல்வியை கட்டிக்க இருக்கும் சரவணனுக்கு இவர் போன் பண் றார்.

வயலில் டிராக்டர்

வயலில் டிராக்டர்

வயலில் டிராக்டர் ஓட்டிக்கொண்டு இருந்த சரவணன், கொம்பன் தப்பிச்சுட்டான்னு கேள்விப்பட்டு உடனே ஒடி வர்றான். டாக்டர் வீட்டுக்கு வந்து, அவருடன் பைக்கில் மாமா வீட்டுக்கு வர்றான்.டாக்டர்,தமிழ்செல்வியை பார்க்க போலாம்னுதான் புறப்பட்டோம்...நீங்க வந்து இருக்கீங்கன்னு தமிழ்செல்வி பெரியப்பா கேட்க, நல்ல வேளை கிளம்பாமல் இருக்கறது நல்லது. கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பிச்சுட்டானாம்னு டாக்டர் சொல்றார்.

கொம்பன் தப்பிச்சுட்டானா?

கொம்பன் தப்பிச்சுட்டானா?

என்னது கொம்பன் தப்பிச்சுட்டானான்னு குடும்பமே அதிர்ந்து கேட்கறாங்க. ஆமாங்க... நம்மவூர் இன்ஸ்பெக்டர்தான் போன் பண்ணி சொன்னார்.நீங்க பதட்டப் படுவீங்கன்னுதான் எனக்கு சொன்னார்.முதலில் தமிழ்செல்வி இருக்கும் இடம் கொம்பனுக்கு தெரிய கூடாதுன்னு டாக்டர் சொல்றார்.

படிக்கறான்னு தெரியாது

படிக்கறான்னு தெரியாது

இந்த ஊரில்கூட தமிழ்செல்வி பட்டணத்துக்கு படிக்கப்போயிருக்கான்னு மட்டும்தான் தெரியும். எந்த ஊர்னு தெரியாது...அதனால இனிமே இந்த ஊர்க்காரங்க யார்கிட்டயும் தமிழ்ச்செல்வி படிக்கற இடத்தை சொல்லக்கூடாதுன்னு சொல்லிக்கறாங்க.

யார் அந்த கொம்பனோ...அவனுக்கு ரெண்டு கொம்போ, நாலு கொம்போ... கிராமத்துல போயி இதுக்கெல்லாம் பயமாம். நல்லலா யோசிச்சு கிராமிய கதைகளை சீரியலா எடுங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X