»   »  கொஞ்சம் நடிங்க பாஸ்... ஆயிரமாவது நாளைத் தொட்டது.. நீங்களும் அனுப்பலாம் உங்களது நடிப்பை!

கொஞ்சம் நடிங்க பாஸ்... ஆயிரமாவது நாளைத் தொட்டது.. நீங்களும் அனுப்பலாம் உங்களது நடிப்பை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதித்யா டிவியின் கொஞ்சம் நடிங்க பாஸ்.. வெளியாக ஆரம்பித்த 1000 நாட்களைத் தொட்டு விட்டது.

சன் தொலைக்காட்சி குழுமத்தின் முழு நேர நகைச்சுவை டிவியே ஆதித்யா டிவி. இதில் ஒளிப்பரப்பாகும் நிகழ்சிகள் அனைத்துமே நகைச்சுவையை மையப்படுத்தியே இருக்கும்.

Konjam Nadinga Boss Reached 1000th Day...!

இதன் சிறப்பே சிரிப்பு + விளம்பரம் தான். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மாறாமல் இருப்பது. ஆதித்யா பாருங்க சிரிச்சுகிட்டே இருங்க என்பது தான் அதன் ஒரு வரி விளம்பரம்.

அசைச்சுக்க முடியாது அசைச்சுக்க முடியாது என்பது அதன் தன்னம்பிக்கை பன்ச்!

இந்த ஆதித்யா தொலைக்காட்சியில், ஒளிப்பரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி ஒரு சில விநாடிகளே வந்தாலும், அதற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.

அத்தகைய பிரபலமான நிகழ்ச்சி ஆரம்பித்து 1000 நாட்களை கடந்ததால், அதனை சிறப்பிக்கும் பொருட்டு, ஆதித்யா தொலைக்காட்சி நிறுவனம், கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சிக்கு இணையதளங்களில் உள்ள ரசிகர்களுக்காக ஒரு வீடியோ பதிவினை பதிவு செய்துள்ளது.

அந்தபதிவில், கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆதவன் அவர்கள் தங்களது ரசிகர்களுக்காக ஒரு வசனத்தை கூறியுள்ளார். அந்த வசனத்தை அதே உணர்ச்சியுடன் நடித்து அதனை வீடியோ எடுத்து அனுப்பினால், ரசிகர்களாகிய உங்களது நடிப்பும் வசனமும் திரையிடப்படும்.

கொஞ்சம் நடிங்க பாஸ் நிகழ்ச்சி தனது 1000 வது நாளினை இணையதள ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளது. ரசிகர்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான நிகழ்ச்சி.. இங்கு அந்த வசனத்தின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது..

Vijayakanth Dialogue from Engal Aasan Movie

It is Konjam Nadinga Boss in facebook create your own video of same dialogue & upload it in Adithya TV and watch it in television

Posted by Konjam Nadinga Boss on Wednesday, March 16, 2016
English summary
Adhithya Tv's Konjam Nadinga Boss Programe reached 1000th day. So they Conduct one Opportunity for facebook peoples to come out their acting talents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil