Tamil selvi serial: இது அலைகள் ஓய்வதில்லை குக்கூவா, இல்லை பூவே பூச்சூடவா குக்கூவா??
சென்னை: சன் டிவியின் மாலை நேர சீரியலான தமிழ்ச்செல்வியில் தமிழ்ச்செல்வியும் தங்கச்சி மல்லிகாவும் குக்கூ சொல்லிக்கறாங்க. காட்டுப் பகுதியில் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வதற்கு.
தமிழ்ச்செல்வி மீது கோபமாக இருக்கும் கொம்பன், பள்ளியில் படிக்கும் தமிழ்ச்செல்வியின் தங்கை மல்லிகாவை கடத்தி ஒரு வாரம் ஆகுது.அதாவது அப்படித்தான் இந்த ஒரு வாரமும் கதை நகருது.
பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திய வாத்தியாரை கொம்பன் கொலை செய்து விடுகிறான். படிப்பில் எப்போதும் முதன்மையாக இருக்கும் தமிச்செல்விக்கு கோபம் வந்து, கொம்பனைத் திட்டி, அவன் மீது எச்சில் துப்பி விடுகிறாள்.

கொம்பன் தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வி டவுனுக்கு படிக்க சென்றுவிட, இங்கு கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பித்து, தமிழ்ச்செல்வியைப் பழி வாங்க துடிக்கிறான். அப்போதுதான் பள்ளியில் இருந்து சைக்கிளில் வந்த மல்லிகாவை கடத்திடறான்.பாவம்ங்க அந்த சின்ன பொண்ணு மல்லிகா.ஒரு வாரமா பள்ளி சீருடையில் கொம்பனுடன் காட்டையே சுத்தி சுத்தி வர்றா.இதுல ஒரு நகைச்சுவை என்னன்னா மல்லிகாவை கொம்பன் கல்யாணம் செய்துக்க போறேன்னு சொல்றது. அவனுக்கே கல்யாணமாகி பத்து வயசுலே ஒரு பொண்ணு இருக்கா.இது கொடுமையா இல்லை?

இரு தோழிகள் தமிழ்ச்செல்வி
தங்கை மல்லிகாவை கொம்பன் கடத்திப் போயிட்டான்னு தெரிஞ்சுகிட்ட, தமிச்செல்வி இலக்கியா, நமீதா ஆகிய தனது தோழிகளுடன் மல்லிகாவைத் தேடி காட்டுக்குள் நுழைகிறாள். ஒரு பக்கம் தமிழ்ச்செல்வியின் வீட்டிலும் மல்லிகாவை கட்டுக்குள் தேடி அலைகிறார்கள்.போலீசாரும் ஒரு புறம் கொம்பனைத் தேடி அலைகிறது. இந்த லட்சணத்தில் போலீசின் துப்பாக்கியை வேறு கொம்பன் பிடுங்கிப் போயிட்டான். இது எப்படி இருக்கு பாருங்க.

என்ன கதை
பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க தமிழ்ச்செல்வி சீரியலை மாலை 6:30மணிக்கு சரியா கொடுக்கறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்போடு இருந்தால், கிராமத்து பெண் குழந்தைகள் தொலைதூர கல்விக்கு செல்வது தவறு என்பது போல ஒரு பயம் காட்டறாங்க. கொம்பன் ஒரு சாதாரண கிராமத்து ரவுடி.அவன் எப்படிங்க ஜெயிலிலிருந்து தப்பிக்க முடியும்? தப்பிக்கற மாதிரி உள்ளூரிலா சிறை இருக்கிறது? மாவட்ட சிறைச் சாலைகள் எப்படி பாதுகாப்பானதாக இருக்கும்னு தெரிஞ்சுக்க வேணாமா?

குக்கூ காட்டில்
தமிச்செல்வி சிறு பெண்ணாக இருந்த போது கண்ணா மூச்சு விளையாட்டு விளையாடுகையில், தங்கை மல்லிகா அக்காவை காணோம் என்று நினைத்து அழறா.அப்போது, விளையாடும் போது நாம் எங்காவது தொலைந்து விட்டால் குக்கூ என்று இருக்கும் இடத்திலிருந்து குரல் கொடுக்க வேண்டும் என்று .அதாவது கிட்டத்தட்ட குடும்ப பாட்டு போலத்தான். தமிழ்ச்செல்வி குக்கூ என்று குரல் கொடுக்க.மல்லிகாவும் குக்கூ என்று குரல் கொடுக்க, கொம்பனை நேருக்கு நேர் பார்த்துவிட்டாள் தமிழ்ச்செல்வி.


Click it and Unblock the Notifications











