»   »  ஆவிகளுடன் பேசும் காதலி… தவிர்க்கும் காதலன்… பாருங்க தி மாஸ்டர்ஸ் சன்

ஆவிகளுடன் பேசும் காதலி… தவிர்க்கும் காதலன்… பாருங்க தி மாஸ்டர்ஸ் சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்கொரியாவில் தயாராகும் சீரியல் மற்றும் சினிமாக்கள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. கதையம்சம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையும் இளமையும் கலந்திருப்பதால், இந்த நாட்டின் சீரியல்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

புதுமையும் இளமையும் தழும்பும் கொரியன் சீரியல்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன. பள்ளி, கல்லூரி இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள்.

இப்போது ஒளிபரப்பாகும் ‘தி ஹேர்ஸ்' தொடரையடுத்து, ‘கே' சீரிஸ் வரிசையில் மார்ச் 23 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ‘தி மாஸ்டர்ஸ் சன்' என்ற திகில் காதல் தொடர் தொடங்குகிறது.

ஆவிகள் சக்தி

ஆவிகள் சக்தி

பழைய அபார்ட்மெண்ட் ஒன்றில் குடியிருக்கிறாள் இளம்பெண் ஜெசிகா. ஒரு விபத்துக்குப்பிறகு அவளுக்கு ஆவிகளைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது.

நிறைவேறாத ஆசைகள்

நிறைவேறாத ஆசைகள்

அந்த ஆவிகள், தங்களுடைய நிறைவேறாத ஆசைகளை ஜெசிகாவிடம் சொல்வதற்காக துரத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால் நிம்மதியாக தூங்கவும் ஓய்வு எடுக்கவும், வேலை செய்யவும் முடியாமல் தடுமாறுகிறாள் ஜெசிகா.

ஆவிகளுடன் பேசுமி ஜெசிகா

ஆவிகளுடன் பேசுமி ஜெசிகா

ஆவிகளுடன் பேசும் ஜெசிகாவை அனைவரும் மனநலம் தவறியவளாக பார்க்கிறார்கள். இந்த நிலையில் ஜெசிகா தற்செயலாக நாயகனைத் தொட்டதும், துரத்திவந்த ஆவிகள் காணாமல் போகின்றன. அதனால் ஆவிகளிடம் இருந்து தப்புவதற்காக எப்போதும் நாயகனுடன் இருக்க விரும்புகிறாள்.

தவிர்க்கும் காதலன்

தவிர்க்கும் காதலன்

ஆனால் ஆவிகளை நம்பாத நாயகன் இவளை தொந்தரவாக நினைத்து விரட்டுகிறான். இவர்களுக்குள் காதல் மலர்ந்ததா, ஆவிகளின் ஆசைகளை ஜெசிகா நிறைவேற்றினாளா என்பதை நோக்கி திக்திக் திகிலுடன் தொடர் நகர்கிறது.

தி மாஸ்டர் சன்

தி மாஸ்டர் சன்

இந்தத் தொடரில் கொரியாவின் புகழ்பெற்ற நட்சத்திரங்களான ஹாங்க் க்யோ ஜின், ஸோ ஜி ஸப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். திகிலும் காதலும் நிறைந்த 'தி மாஸ்டர்ஸ் சன்' தொடரை புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு பார்த்து ரசியுங்கள்.

English summary
Pudhuyugam is launch, for a selection of the finest South Korean TV Productions under the title 'K Series'. The Master’s Sun will be dubbed in Tamil for telecast on Pudhuyugam on March 23.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil