»   »  400 வருட வேற்றுக்கிரகவாசியை காதலிக்கும் 18 வயசு பெண்!... இது கொரியன் சீரியல்

400 வருட வேற்றுக்கிரகவாசியை காதலிக்கும் 18 வயசு பெண்!... இது கொரியன் சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழுகாட்சி சீரியல்களைப் பார்த்து அலுத்துப் போனவர்கள் இந்தி டப்பிங் சீரியல்கள் பக்கம் ரிமோட்டை மாற்றி வருகின்றனர். இந்தி டப்பிங் சீரியல்களைப் போலவே கொரியன் சீரியல்களுக்கும் தமிழ் ரசிகர்களிடையே தனி வரவேற்பு உள்ளது. புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'கே' சீரிஸ் வரிசையிலான கொரியன் தொடர்களுக்கு மக்களிடையே நாளுக்குநாள் வரவேற்பு பெருகிவருகிறது.

இப்போது ஒளிபரப்பாகும், காதலர்கள் கூடுவிட்டு கூடுபாயும் வித்தியாசமான ‘சீக்ரெட் கார்டன்' தொடரையடுத்து ஜூலை 30ம் தேதி முதல் தினமும் 7.30 மணிக்கு ‘மை லவ் ஃப்ரம் த ஸ்டார்' தொடங்குகிறது.

வேற்றுகிரகவாசி கதை

வேற்றுகிரகவாசி கதை

400 வருடங்களாக பூமியில் வசிக்கும் வேற்றுகிரகவாசிக்கும் புகழ்பெற்ற 18 வயசு நடிகைக்கும் ஏற்படும் புதுமையான காதல் தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் ஜூலை 30ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

அதீத சக்தி

அதீத சக்தி

வேறு ஒரு கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டில் பூமிக்கு வரும் இளைஞன், அப்போது ஆபத்தில் இருக்கு ஓர் இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றுகிறான். அவன் மனிதர்களைவிட அதீத சக்தி படைத்தவனாகவும், என்றும் இளமையுடனும் இருக்கிறான்.

சொந்த கிரகத்திற்கு

சொந்த கிரகத்திற்கு

தன்னுடைய ஆய்வுகளை முடித்து 400 வருடங்களுக்குப்பிறகு சொந்த கிரகத்துக்குச் செல்ல தயாராக இருக்கிறான். இந்த நேரத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகை, இவனுடைய பக்கத்து ஃப்ளாட்டுக்கு குடிவருகிறாள். அவளுக்கு அபார திறமை, அழகு, வசதி, புகழ் இருந்தாலும் மனதளவில் குழந்தையாக, அப்பாவியாக இருக்கிறாள்.

நடிகை மீது காதல்

நடிகை மீது காதல்

பூமிக்கு வந்தபோது தன்னால் காப்பாற்றப்பட்ட இளம்பெண்ணின் சாயலில் நடிகை இருப்பதைக் கண்டு, அவள் மீது காதல் கொள்கிறான். நடிகைக்கும் அவன் மீது காதல் வருகிறது. இவர்கள் காதல் நிறைவேறியதா என்பதை நோக்கி, ‘மை லவ் ஃப்ரம் த ஸ்டார்' கவித்துவமாக நகர்கிறது.

கொரியாவில் சூப்பர் ஹிட்

கொரியாவில் சூப்பர் ஹிட்

கொரியாவில் மாபெரும் வெற்றியடைந்த இந்தத் தொடர் பல்வேறு அவார்டுகளையும் வென்றுள்ளது. காதலும் சயின்ஸ் பிக்ஷனும் நிறைந்த, ‘மை லவ் ஃப்ரம் த ஸ்டார்' தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வாராந்திர எபிஸோடுகளின் தொகுப்பு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

English summary
Puthuyugam Tv new Korean series,‘My Love from the star will telecast from July 30

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil