Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேசப்போகும் கொரியன் சீரியல்கள்
தென்கொரியாவில் தயாராகும் சீரியல் மற்றும் சினிமாக்கள் உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. கதையம்சம் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமையும் இளமையும் கலந்திருப்பதால், இந்த நாட்டின் சீரியல்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவில் முதல்முறையாக புதுயுகம் தொலைக்காட்சியில், 'கே சீரிஸ்' வரிசையில் புகழ்பெற்ற கொரியன் படைப்புகள் வெளிவர உள்ளன.
'பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்', 'ஐரிஸ்', 'பிளேஃபுல் கிஸ்', 'கிரேட்டஸ்ட் லவ்', பாஸ்தா' போன்ற உலகப்புகழ் பெற்ற சீரியல்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் வரிசையாக தமிழில் ஒளிபரப்பாக உள்ளன.
பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்
மே 12-ம் தேதி முதல் நம்பர் ஒன் தென்கொரிய படைப்பான 'பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' மெகா தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு தமிழில் ஒளிபரப்பாகிறது.
பள்ளி பருவ காதல்
ஒரு பள்ளியில் நடக்கும் காதல், பிரிவு, நட்பு, மோதல்களை உணர்வுபூர்வமாக நகைச்சுவையுடன் சொல்லும் இந்தத் தொடர் கார்ட்டூன் வடிவத்திலும் வெளியாகி வெற்றிபெற்றுள்ளது
பேரனுக்காக பள்ளி
இந்தத் தொடரில், தென்கொரியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரர், தன்னுடைய பேரன் படிப்பதற்காக ஷின்க்வா ஹைஸ்கூலை பிரமாண்டமாக தொடங்குகிறார்.
நான்கு பையன்கள்
பெரும் பணக்காரர்கள் மட்டுமே படிக்கக்கூடிய அந்தப் பள்ளியில் 'எஃப் 4' கும்பலைச் சேர்ந்த நான்கு பையன்கள் ஏகப்பிரபலம். அவர்களிடம் நட்பு கொள்வதற்கு அத்தனை பெண்களும் ஏங்குகிறார்கள்.
குரூர தண்டனை
அதேநேரம் இந்த கும்பலை எதிர்ப்பவர்களுக்கு மிக குரூரமான தண்டனை கிடைக்கிறது. அதனால் இவர்களிடம் அனைவரும் விலகியே இருக்கிறார்கள்.
ஏழை சிறுமி
இந்த சூழலில் லாண்டரி கடை நடத்தும் ஏழைப் சிறுமி ஜான்ஸிக்கு இந்தப் பள்ளியில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப்பில் இடம் கிடைக்கிறது. அழகும் துணிச்சலும் நிறைந்த ஜான்ஸி நட்புக்காக எதையும் செய்யக்கூடியவள்.
தனியாக போராடும் கதாநாயகி
தன்னுடைய தோழிக்கு ஏற்படும் பிரச்னைக்காக 'எஃப் 4' கும்பல் மாணவர்களை எதிர்த்து நிற்கிறாள். மாபெரும் பணக்கார மாணவர்களை எதிர்த்து தன்னந்தனியாக போராடுகிறாள் ஏழை ஜான்ஸி.
மோதலில் தொடங்கி காதல்
மோதலில் தொடங்கும் இந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அதன்பிறகு ஜான்ஸியின் காதலைப் பிரிப்பதற்கான போராட்டத்தை நாயகனின் பெற்றோர் தொடங்குகிறார்கள்.
நகைச்சுவையும் காதலும்
பள்ளியில் தொடங்கும் இந்தப் போராட்டம், அவர்கள் கல்லூரியில் நுழைந்தபிறகு உச்சகட்ட மோதலை சந்திக்கிறது. மாணவர்களின் உலகத்தைக் காட்டும் இளமை துள்ளலுடன் சொல்லும் இந்தத் தொடரில் காதலும் நகைச்சுவையும் நிரம்பி வழிகிறது.
ஹாலிவுட் கதாநாயகி
ஹாலிவுட் படங்களிலும் ஏராளமான தொடர்களிலும் நடித்திருக்கும் நடிகை கூ கை சன், இந்தத் தொடரின் நாயகியாக நடித்திருக்கிறார்.
விருது பெற்ற சீரியல்
ஆசியன் டெலிவிஷன் அவார்டு உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும், 'பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' தொடரை தினமும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
டப்பிங் சீரியல்கள்
இதுவரை இந்தி தொடர்கள்தான் டப்பிங் செய்யப்பட்டு வரிசை கட்டி தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முதன்முறையாக கொரியன் தொடர்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் பேச வரப்போகிறது. இனி வரிசையாக ஹாலிவுட் சீரியல்கள் தமிழ் பேசினாலும் ஆச்சரியமில்லை.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே