Arundhathi serial: ஆஹா வந்திருச்சு கோவை சரளாவுக்கு அருந்ததியில்!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் கலகலப்பான திகில் தொடர்னு தினமும் ராத்திரி பத்து மணிக்கு ஒளிபரப்பாகிட்டு வருது. இதில் கோவை சரளா நடிக்கப்போறார்னு தெரிஞ்சவுடன் எதிர்பார்ப்பு .கூடிப்போனது
ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியதுன்னு சொல்லலாம். காஞ்சனா படத்தில் மனோபாலா போலி பேய் ஓட்டுபவரா வருவார். அதை இந்த சீரியலில் கோவை சரளாவுக்கு கொஞ்சம் மாத்தி குடுத்து இருக்காங்க.
தினமும் கொஞ்ச கொஞ்ச நேரம் வந்து நகைச்சுவைன்னு ஏதோசெய்துட்டு போறார்.பாவம்,கோவை சராளாவின் இமேஜை கெடுத்துருவாங்க போல. இந்த சீரியலில் இவருக்கான கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கு.

கொஞ்சமா நஞ்சமா
ஈஸ்வரி அம்மா குடும்பம்,ஈஸ்வரி அம்மா, தெய்வானை இவங்களுக்கு எல்லாம் ஆரம்பத்தில் குடுத்த பில்டப் இருக்குதே அது கொஞ்சமா நஞ்சமான்னு நினைக்க வேண்டி இருக்கு. ஒரு சின்னப்பொண்ணு தெய்வானை... அவள் ஒருபேய் ஓட்டுபவரை அதாவது கோவை சரளா அண்ட் கம்பெனியை அழைச்சுட்டு வர, அவங்களுக்கு வீட்டிலிருக்கும் எல்லாரும் மதிப்பு தர்றது வேடிக்கையா இருக்கு.

உன் சக்திதான் உண்மை
சண்முகத்தின் உள்ளே ஆவியாக ஆக்கிரமிச்சு இருக்கும் அருந்ததி வெளியில் வந்து,முட்டாள் அவ போலி பேயோட்டி. அவகிட்ட எந்த சக்தியும் இல்லை...உண்மையில் இந்த குடும்பத்தை காப்பாத்திக்கிட்டு இருக்கறது உனக்குள் இருக்கும் சக்திதான்னு சொல்லியும் தெய்வானை இந்த போலி சாமியார் சொல்வதை கேட்டுக் கொண்டு இருப்பது கோவைக்கு சரளா நடிக்க சீரியலில் இடம் வேண்டும் என்பதால்தான் என்று புரிகிறது.

சர்க்கஸ்காரி போலத்தான்
இயக்குனர், நடன மாஸ்டர் லாரன்ஸ் கோவை சரளாவை ஒரு சர்க்கஸ்காரி போலத்தான் உருள வைப்பார்.புரள வைப்பார்...அது ஒர்கவுட் ஆச்சு.ஆனா, உங்களுக்கு அதாவது அருந்ததி சீரியல் கதைக் குழுவுக்கு கோவை சரளா கதாபாத்திரம் ஒர்கவுட் ஆகலை. இவ்ளோ பெரிய ஆர்ட்டிஸ்ட்டை வரவழைச்சு இப்படி வீணாக்கிட்டீங்களே.

சூரி சரளா காதல்
அது மட்டுமா...அரண்மனை படத்தில் சூரி மேல் கோவை சரளாவுக்கு லவ் வந்துரும். அதே மாதிரி இந்த சீரியலிலும் சண்முகத்தின் மேல சரளாவுக்கு லவ் வந்துருது. அவனுக்குள் இருக்கும் அருந்ததி பேய் வந்து நான்தானே இவனுக்குள்ள இருக்கேன்னு சொல்லியும், என் டார்லிங்கை விட்டுடுன்னு கோவை சரளா செல்லமா கொஞ்சறது நிஜமா நல்லா இல்லைங்க.


Click it and Unblock the Notifications











