Arundhathi serial: அருந்ததியில் கோவை சரளா கெட்டப் நல்லாருக்கே!

சென்னை: சன் டிவியின் திகில் தொடர் அருந்ததி சீரியலில் இன்று முதல் கோவை சரளா வர இருக்காங்களாம்.

பேய் படம் என்றாலே குழந்தைகளுக்கு முதலில் நினைவுக்கு வருபவரும், அவர்களுக்கு பரிட்சயமானவரும் நடிகை கோவை சரளாதான்.

இப்படி,குழந்தைகளையும், பெண்களையும் அருந்ததி சீரியல் பக்கம் ஈர்க்கும் வகையில், நடிகை கோவை சரளாவை களம் இறக்க உள்ளது கதைக் குழு.

சீரியலில் கோவை சரளா

சீரியலில் கோவை சரளா

முதலில் அருந்ததியின் விளம்பர ப்ரோமோவுக்கு .கோவை சரளாவை விதம் விதமாக பேச வைத்து ஒளிபரப்பு செய்து வந்தது.இப்போதும்கூட கோவை சரளா பிரோமோவில் வந்துகொண்டுதானே இருக்கார் .இந்த நேரத்தில்தான் தெய்வ சக்தி நிறைந்த தெய்வானைக்கும்,, சண்முகத்தின் உடலில் ஆட்கொண்டுவிட்ட அருந்ததி பேயின் தீய சக்திக்கும் நடக்கும் போராட்டம்தான் இனி கதை.

சாகடித்து விடுகின்றனர்

சாகடித்து விடுகின்றனர்

மூன்று வருடங்களுக்கு முன்னர் அருந்ததியை ஈஸ்வரி அம்மாவின் குடும்பத்தினர் அருந்ததியை வாழ விடவில்லையாம். கிணற்றில் தள்ளி சாகடித்து விடுகின்றனர். இது தீய சக்தியாக மாறி, ஈஸ்வரி அம்மாவின் குடும்பத்துக்கு தொல்லை கொடுத்து வர, கிணற்றை விட்டு வெளியே வராதவாறு கேட், மந்திர கட்டுக்கள் எல்லாமே போட்டாகிவிட்டது. என்றாலும், சண்முகம் அமெரிக்காவிலிருந்து தனது காதலியுடன் வரும்போது, மந்திர கட்டுக்களை அவிழ்த்து விட்டுடறான்.

உச்சியில் கொண்டை

உச்சியில் கொண்டை

அருந்ததி பெண்ணாக பிறந்தும், அனுபவிக்க வேண்டிய சுகங்களை அனுபவிக்காமல், ஆசைப்பட்ட புடவை, நகைகளை போட்டுக் கொள்ளாமல், வாழாமல் போன ஏக்கத்தை, சண்முகத்தின் உடலில் புகுந்து தீர்த்துக் கொள்கிறாள். பட்டுப்புடவை உடுத்தி,நெற்றி நிறைய போட்டு வைத்துக் கொள்வது, மஞ்சள் பூசி குளிப்பது, தலை நிறைய மல்லிப்பூவை வச்சுக்கறதுன்னு ஏகப்பட்ட ஆசைகள் அருந்ததிக்கு. சண்முகத்தின் உடலில்தான் அருந்ததி தீய சக்தி புகுந்துகிச்சுன்னு தெய்வானைக்கு தெரிஞ்சு போச்சு. மஞ்சள்உடை , உச்சியில் கொண்டை என்று கோவை சரளாவின் கெட்டப் நல்லாருக்கு

கோவை சரளா தெய்வானை

கோவை சரளா தெய்வானை

அந்த தீய சக்தியுடன் போராட நீதான் எனக்கு சக்தி தரணும் முருகா.என்னாலதான் அதை அழிச்சு, இந்த குடும்பத்தை அந்த தீய சக்தியிடம் இருந்து காப்பாத்த முடியும்னு ஈஸ்வரி அம்மா நம்பறாங்கன்னு தெய்வானை மனம் உருகி வேண்டிக்கறா .இந்த சமயத்துலதான் மஞ்சள் புடவை, உச்சியில் கொண்டை , கழுத்தில் ருத்திராட்ச மாலைகள் என்று புதுவித கெட்டப்பில் அசத்தறார் கோவை சரளா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X