Arundhathi Serial: குட்டீஸ் கேளுங்க.. அருந்ததி திகில் சீரியலில் கோவை சரளா!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் கோவை சரளா வரப்போறாங்களாம். எப்போ, எப்படி என்றெல்லாம் இனிமேல்தான் தெரிய வரும்.
முனி, காஞ்சனா இப்படி ரொம்ப ஜாலியா பேய் படம் வந்தாலும் வந்துச்சு... குழந்தைகள் பேய் படம்னா விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுடறாங்க.
தியேட்டர்களுக்கு போகாத குடுமபம் கூட, பேய் படம் ரிலீஸ் ஆனா கூட்டமா கிளம்பிடறாங்க. பேய்களே கண்டு பயந்து ஓடும் அளவுக்கு தியேட்டர்களில் அப்படி ஒரு ஆரவாரம்.

வாயில வச்சுக்கிட்டு
பால் புட்டிய வாயில வச்சுக்கிட்டு கூட பேய் படம் பார்க்கற குழந்தைகள் இருக்கும் கலிகாலம் இது. இதை எல்லாம் கெட்டியா புடிச்சுக்கிட்டுத்தான் லாரன்ஸ் மாஸ்டர் பேய் கதை ஃபார்முலாவை இப்போதைக்கு கை விடறதா இல்லை. இது அவருக்கு வெற்றி ஃபார்முலா. பேய் கதை குழந்தைகள், பெண்களை கவரும் வெற்றி ஃபார்முலான்னு பலரும் அதை கையில் எடுத்து இருக்காங்க. பலரும் சரி விகிதத்தில் இல்லை என்றாலும், ஓரளவு வித்தியாசத்தில் வெற்றிதான் கண்டு வருகிறார்கள்.

பேய் கதை சீரியல்
சின்னத் திரையிலும் பேய் கதை சீரியல்கள் மும்முரமாகிக் கொண்டு வரும் வேளையில் சன் டிவியில் அருந்ததி என்று ஒரு சீரியல். கலகலப்பான திகில் தொடர்னு விளம்பரப் படுத்தினார்கள்.. இதன் ப்ரோமோவில் நடிகை கோவை சரளா வந்ததில் சீரியலுக்கு கூடுதல் பிளஸ் என்று கூட சொல்லலாம். சன் டிவியில் அருந்ததி சீரியல் இப்போது கலகலப்பாக போய்க்கொண்டுதான் இருக்கிறது. தெய்வ சக்திக்கும், தீய சக்திக்குமான போட்டி என்பதால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. வழக்கமான பேய் படங்களில் அல்லது சீரியல்களில் அம்மனுக்குத்தான் முதலிடம் இருக்கும்.இந்த சீரியலில் தமிழ் கடவுள் முருகன் தீய சக்தியை அளிக்கும் சக்தியா வருவது சிலிர்ப்பா இருக்கு.

சரளா அருந்ததியில்
இப்படிப்பட்ட நிலையில்தான் குழந்தைகள், பெண்களுக்குப் பிடித்த நடிகை கோவை சரளா அருந்ததியில் வரப்போறாங்களாம்...அதுவும் கூடிய விரைவில்.இதை கோவை சரளாவே ப்ரோமோவில் சொல்றாங்க.பேய் கதை என்றாலே குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் கோவை சரளாவின் பயம்தான் குழந்தைகளுக்கான சிரிப்பு ட்ரீட்.

கோவை சரளா ஏன்
சமீப காலமாக பேய்ப் படங்களில் பேய்க்கு அடுத்த முக்கிய கேரக்டராக கோவை சரளா விளங்குகிறார். குறிப்பாக ராகவா லாரண்ஸ் படங்களில் பேயைக் கண்டு பயப்படும் பிள்ளையின் தாயாக கலக்கிக் கொண்டிருக்கிறார் சரளா. இவரது பேசும் ஸ்டைல், பேயைக் கண்டு கத்தும் விதம், மகனின் அழிச்சாட்டியங்களைக் கண்டு அலுத்துக் கொள்ளும் ஸ்டைல் என எல்லாவிதத்திலும் அசத்துவதில் கோவை சரளாவுக்கு நிகர் அவரேதான். குட்டீஸ்களுக்கும் கூட கோவை சரளாவின் காமெடி கலாட்டா ரொம்பப் பிடித்திருக்கிறது. எனவேதான் இந்த பேய்க் கதை சீரியலுக்கும் சரளாவைக் கூட்டி வருகிறார்கள் போல.
வரவேற்பு எப்படி இருக்கும் பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











