5 லட்சமும் காலி.. சீக்கிரம் சம்பாதிச்சுட்டு அந்தப் பக்கம் உதவி பண்ண வரேன்.. கேபிஒய் பாலா வேறலெவல்!

சென்னை: விஜய் டிவி மூலம் பிரபலமான கலக்கப்போவது யாரு சாம்பியன் பாலா இந்த மாதம் சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வந்தார். பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட சில லட்சங்களை செலவு செய்ய தயங்கி வரும் சூழலில் தன்னிடம் இருந்த மொத்த காசையும் சென்னை மக்களுக்காக பாலா கொடுத்தது பெரும் பாராட்டுக்களை அவருக்கு பெற்றுத் தந்தது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய பெரிய ஈவென்ட்களை தொகுத்து வழங்குவது என உலகில் உள்ள பல தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதன் மூலம் அவர் ஈட்டி வரும் வருமானத்தில் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் தவித்து வந்த சில கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி சேவை செய்தார்.

KPY Bala says will earn some money and soon come to Tirunelveli and Tuticorin for flood relief

5 லட்சம் உதவி: அதன் பின்னர், வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு முதற்கட்டமாக 200 குடும்பங்களுக்கு தல ஆயிரம் ரூபாய் என 2 லட்சம் வரை கையில் இருந்த காசை எடுத்துக் கொடுத்தார். மேலும், வட்டி கட்டி வந்த 3 லட்சம் ருபாய் பணத்தையும் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை நன்கொடையாக வழங்கி நெகிழ வைத்தார்.

கேபிஒய் பாலா விளம்பர போதைக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றும் அவருக்குப் பின்னால் அரசியல் தலைவர் யாரோ ஒருவர் இருந்து கொண்டு அவருக்கு பணத்தை கொடுக்கிறார் என்றும் ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பின. ஆனால், அடுத்தவர் காசை வைத்து தான் ஒருபோதும் தானம் செய்வதில்லை என்றும் அனைத்துமே தனது சொந்தக் காசு தான் என்றும் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்தால் தன்னால் முடியாத நேரத்தில் மக்கள் என்னை பார்த்துக் கொள்வார்கள் என நம்பிக்கையுடன் பேசி வருகிறார்.

தென் தமிழ்நாட்டிற்கு உதவுவாரா?: இந்நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாலா பங்கேற்றபோது சென்னை மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்தீர்கள். அதேபோல பெருமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள மக்களுக்கு உதவி செய்தீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலா, தன்னிடம் இருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தையும் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செலவு செய்து விட்டதாகவும், சீக்கிரமே சில வேலைகளை செய்து சம்பாதித்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு விரைவில் உதவ வருகிறேன் என்றும் .

சென்னை மக்களுக்காக களத்தில் குதித்த பல பிரபலங்கள் தென் தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு ட்வீட் கூட போடாமல் இருப்பது அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், பாலாவின் இந்த ஆறுதலான வார்த்தைகள் அவர்களுக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்துள்ளது.

நல்ல மனசு: மக்களுக்கு ஆட்சியாளர்கள் தான் உதவ வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. நல்ல மனம் கொண்ட யார் வேண்டுமானாலும் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் உதவி செய்ய வேண்டும் என்கிற நல்ல குணத்தை பலரும் கேபிஒய் பாலாவிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஆனால், அவருக்கு ஏதாவது நிதி நெருக்கடி, வாய்ப்புகளே இல்லாமல் போகும் சூழல் உருவாகும் போது அவருக்கு உதவ அவரால் பலன் அடைந்தவர்கள் முன் வர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X