சென்னையில் புதுவீடு வாங்கி பால் காய்ச்சிய கேபிஒய் சரத்.. 12 வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!

சென்னை: விஜய் டிவி பிரபலங்கள் வரிசையாக சொகுசு கார் வாங்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய வீடுகளை கட்டி புதுமனை புகுவிழா நடத்தும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். சன் டிவி உள்ளிட்ட மற்ற சேனல்களிலும் சின்னத்திரை பிரபலங்கள் நல்லாவே சம்பாதித்து வருகின்றனர்.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட ஷோக்கள் மூலம் ரொம்பவே பாப்புலராக இருப்பது விஜய் டிவி பிரபலங்கள் தான். அதிலும், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் பிரபலமாகி வருகின்றனர். சிவகார்த்திகேயன், மணிகண்டனே அங்கே இருந்து வந்தவர்கள் தான்.

kpy sarath new house television

கேபிஒய் பாலா, புகழ் என பலர் கலக்கி வரும் நிலையில், தற்போது கேபிஒய் சரத் 12 வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த பணத்தில் சென்னையில் சொந்தமாக வீடு கட்டி குடிபோயுள்ளதாக புதுமனை புகுவிழா புகைப்படங்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

kpy sarath new house television

12 வருட போராட்டம்: "நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறியது சென்னையில் வீடு வாங்குவது. 12 வருடம் போராட்டத்திற்குப் பிறகு ஒரு இடத்தை எங்கள் வீடு என்று அழைக்கும் நாள் வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி.. என்னுடன் உறுதுணையாக இருந்த என் துணை கிருத்திகா கிருஷ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி, லவ் யூ மா" என கேப்ஷன் போட்டு கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி செய்து பிரபலமான கேபிஒய் சரத் தனது புதுமனை புகுவிழா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

kpy sarath new house television

சென்னையில் புது வீடு: தீபாவளி, பொங்கல் வந்துவிட்டாலே பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவார்கள். சென்னையின் ஒரிஜினல் பாப்புலேஷனே அன்று தான் தெரியவரும். மற்ற நாட்களில் வாடகை வீடுகளில் தங்கிக் கொண்டு ஊர்களில் இருந்து சாதிக்க வந்தவர்கள் பலரும் டிராபிக் ஜாம் செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் பலருக்கும் சென்னையில் வேலை செய்து சம்பாதித்து சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் பெருங்கனவாக இருக்கும். இருக்கிற விலைவாசியில் சுமாராக சென்னையில் ஒரு வீடு இடம் வாங்கி கட்டி குடிபோக வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 50 லட்சம் முதல் சில கோடிகள் வரை ஆகிறது. இந்நிலையில், சென்னையில் வீடு வாங்கும் தனது கனவு நிறைவேறிவிட்டது என கேபிஒய் சரத் பதிவிட்ட நிலையில், அவருக்கு நடிகை திவ்யா துரைசாமி, காமெடி நடிகர் தங்கதுரை உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

kpy sarath new house television

பால் பொங்குது: புது வீட்டுக்கு சென்று பால் காய்ச்சுவது தமிழர்களின் வழக்கமாக உள்ளது. இன்று நடைபெற்ற புதுமனை புகுவிழா புகைப்படங்களில் பால் பொங்கும் போட்டோவையும் தனது மனைவி கிருத்திகாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களையும் கேபிஒய் சரத் வெளியிட்டுள்ளார். மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இவரும் இவரது மனைவியும் சீசன் 3ன் டைட்டிலை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X