வசி மாதிரி ஒரு கணவர்.. பிரியங்கா தேஷ்பாண்டே அனுபவித்த வேதனைகள்.. கேபிஒய் சரத் ஓபனாக சொல்லிட்டாரே!
சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வசி எனும் இலங்கையை சேர்ந்த டிஜேவை திருமணம் செய்துக் கொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பிரியங்கா.
டிடி நீலகண்டனை தொடர்ந்து விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த பிரியங்காவுக்கு பிரவீன் குமார் என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால், அந்த திருமணம் பிரியங்காவுக்கு செட்டாகாத நிலையில், முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், இரண்டாவதாக வசி சாச்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிரியங்கா ஹனிமூனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பிரியங்கா பற்றியும் அவரது கணவர் குறித்தும் கேபிஒய் சரத் மற்றும் அவரது மனைவி இணைந்து பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2வது திருமணத்தை முடித்த பிரியங்கா தேஷ்பாண்டே: விஜய் டிவியின் தொகுப்பாளினி மற்றும் பிக் பாஸ் சீசன் 5ன் போட்டியாளரான பிரியங்காவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதுமே கலகலப்பாக பேசி மற்றவர்களை சிரிக்க வைத்து வரும் பிரியங்காவுக்கு கோபப்பட எல்லாம் தெரியுமா என்பதையே பிக் பாஸ் நிகழ்ச்சி தான் வெளிச்சம் போட்டுக் காட்டியது. மேலும், அவரது வாழ்க்கையின் சோக பக்கங்களையும் ரசிகர்கள் அறிந்துக் கொண்ட நிலையில், 2வது திருமணத்தை இந்த மாத தொடக்கத்தில் செய்து முடித்தார் பிரியங்கா தேஷ்பாண்டே.
இலங்கை அரசியல்வாதியின் உறவினர்: ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல டிஜேவான வசி சாச்சி என்பவரைத்தான் பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. குழந்தைகள் இருக்காங்க என்றெல்லாம் சில வதந்திகள் உலா வருகின்றன. ஆனால், அவர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த மறைந்த இரா. சம்பந்தனின் தங்கை மகன் தான் இந்த சாச்சி என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரியங்கா அழுது பார்த்திருக்கிறேன்: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா எப்போதுமே தன்னை சுற்றி இருப்பவர்களை ஜாலியாகவும் கலகலப்பாகவும் வைத்திருப்பதை தான் ரசிகர்கள் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால், அவருடன் நெருங்கி பழகினால் தான் அவர் எந்தளவுக்கு சென்சிடிவான நபர் என்றும் அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும் புரியும். பிரியங்கா அழுது பார்த்திருக்கிறேன். அவருடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது என அறிந்ததுமே ரொம்பவே நாங்க சந்தோஷப்பட்டோம் என கேபிஒய் சரத் மற்றும் அவரது மனைவி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
லவ் பண்ணா போதும்: பிரியங்காவை பொறுத்தவரை எல்லாத்தையுமே அவரால் பார்த்துக் கொள்ள முடியும். அவருக்கு ஒரே ஒரு ஆசை தான். அவரை லவ் பண்ணக் கூடிய ஒரு துணை வாழ்க்கையில் இருந்தால் போதும். ஆனால், அவருக்கு தற்போது கிடைத்துள்ள கணவர் வசி ரொம்பவே லவ் அண்ட் கேரிங் ஆன பர்சன் பிரியங்காவை எப்போதுமே இனி கண் கலங்காமல் பார்த்துக் கொள்வார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவங்க ரெண்டு பேருமே எப்போதுமே ஹேப்பியா இருப்பாங்க என கேபிஒய் சரத் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











