மாமன் சூரியாகவே மாறிய கேபிஒய் சரத்.. காதணி விழா செம கிராண்டா நடந்துருக்கேப்பா!

சென்னை: விஜய் டிவி மூலம் ஏகப்பட்ட பேர் பிரபலங்களாக மாறியுள்ளனர். பலர் தற்போது சின்னத்திரையில் ஹீரோவாகவே அசத்திக் கொண்டிருக்கின்றனர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மதுரை முத்து, புகழ், பாலா என ஏகப்பட்ட பிரபலங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளனர். கேபிஒய் சரத்தும் அப்படி அந்த ஷோ மூலம் பிரபலமானவர் தான்.

கடந்த வாரம் ஏகப்பட்ட முகூர்த்தங்கள் இருந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா திருமணம், சச்சின் மகன் திருமணம், அல்லு சிரிஷ் திருமணம், ஏஜிஎஸ் வீட்டு திருமணம், மதுரை முத்துவின் மகள்களின் பூப்புனித நீராட்டு விழா என ஏகப்பட்ட விழாக்கள் களைகட்டின.

KPY Sarath shares Ear Piercing function photos
Photo Credit:

அந்த வகையில் கேபிஒய் சரத்தின் மருமகன் மற்றும் மருமகளின் காதணி விழாவும் நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

டைட்டில் வின்னர்: மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் சின்னத்திரை சீசன் 3ன் டைட்டில் வின்னரே கேபிஒய் சரத் தான். மொட்டை ராஜேந்திரனின் மகன் போல அப்படியே அச்சு அசல் இருக்கும் இவர் ஏகப்பட்ட காமெடி காட்சிகளில் நடித்து விஜய் டிவி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். மேலும், கேபிஒய் பாலா போல இவரும் அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.

விஜய் டிவி கேங்: மாகாபா ஆனந்த் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்களுடன் சமீபத்தில் வனவிலங்கு சரணாலயத்துக்கும் சென்ற புகைப்படங்களையும் கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், தற்போது சூரிக்கே டஃப் கொடுக்கும் வகையில் தாய் மாமனாக மாஸ் காட்டிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

காதணி விழா: "என் மருமகன் & மருமகள் காதணி விழா சிறப்பாக முடிந்தது விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய அனைத்து நல் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி.. தாய்மாமனாக நான்!" என கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதணி விழா புகைப்படங்களை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். என்னதான் சினிமா விழாக்களில் பங்கேற்றாலும் சொந்த பந்தங்களுடன் குடும்ப விழாக்களில் பங்கேற்பது தான் பிரபலங்களுக்கு தனி உற்சாகத்தையும் உண்மையான சந்தோஷத்தையும் கொடுக்கும் என்பது கேபிஒய் சரத்தின் முகத்தை பார்த்தாலே தெரிந்துக் கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X