ஹலோ பிக் பாஸ் போதும் நிறுத்துங்க... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வைத்து ஸ்பூப் செய்யப்பட்டது.

சென்னை: பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வைத்து கலக்கப் போவது யார் டீம் செய்த ஸ்பூப் காமெடி சிரிப்பு வரவழைத்து வயிறை புன்னாக்கியது.

கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.இதில் நடிகர் மகன், தேவர்மகன் பட ஸ்டைலில் வேட்டி சட்டையும் வந்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

KPY team trolls bigg boss contestants

நிகழ்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு முன்பாகவே, கலக்கப் போவது யாரு காமெடி டீமை சேர்ந்தவர்கள், சீசன் இரண்டில் பங்கேற்ற போட்டியாளர்களை போல் நடித்து ஸ்பூப் காமெடி செய்தார்கள்.

இதை பார்த்த போது உண்மையிலேயே வயிறு புன்னாகும் அளவிற்கு சிரிப்பு வந்தது. பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டியாளர்களை எப்படி கலாய்தார்களோ, அப்படியே அவர்களை கலாய்தார்கள் கலக்கப் போவது யாரு குழுவினர்.

அதுவும், மும்தாஜ், செண்ராயன், பாலாஜி, ஐஸ்வர்யா, டேனி கெட்டப்பில் வந்தவர்கள் செய்த ரகளை குளுங்க குளுங்க சிரிப்பை வர வைத்தன. கவுண்டமணி எண்ட்ரி செம மாஸ். அவர் செய்த அலப்பறைகள் தாங்க முடியவில்லை.

குறிப்பாக ஜனனியையும், ஐஸ்வர்யாவையும் செம ஓட்டு ஓட்டினார்கள் கலக்கப் போவது யாரு குழுவினர். முகத்துக்கு நேராகவே அவர்கள் கலாய்த்தாலும், சிரித்து ரசித்தார்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

ஆனால் ஒரு சிலரின் முகம் அஷ்டகோணலாக மாறியது. கலாய் நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரையில் தோற்றிய கமல், யாரும் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுரை கூறினார்.

ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நிகழ்ச்சியின் போட்டியாளர்களை எப்படி எல்லாம் கலாய்க்க வேண்டும் என ரசிகர்கள் நினைத்தார்களோ, கலக்கப் போவது யார் டீம் அப்படியே கலாய்த்த விதம் பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X