செஞ்சு வச்ச சிலை.. கிருத்திகா நின்ற கோலத்தைப் பார்த்து.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்!
சென்னை: தலை நிறைய மல்லிகைப்பூவோடு ஒற்றை முடி முகத்தில் ஆட வந்த சொப்பன சுந்தரி கிருத்திகாவை பார்த்ததும் கிளுகிளுப்பு கூடிப்போச்சாம் ரசிகர்களுக்கு.
இவர் அழகா இல்ல இவர் கட்டிய சேலை அழகானு இன்ஸ்டாகிராமில் ஒரு பட்டிமன்றமே போகுது.
இந்த வயதிலும் சிக்குனு இருக்கும் இவரைப் பார்த்து கிக் ஏறுதாம் ரசிகர்களுக்கு.

அந்த கண்ணுதான்
மாடர்ன் உடையில் வந்தால்தான் மாடர்ன் என்று இல்ல பட்டுப் புடவையிலும் காந்த பார்வையால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் கிருத்திகா காலை வணக்கம் சொல்லி கதற விட்டிருக்கிறார். இந்த மாதிரி ஒரு காலை வணக்கம் கிடைச்சுதுனா அந்த நாள் இனிய நாள் தான். இனி இந்த நாள் எப்படினு ஜோசியம் கூட தேவையில்லைனு கொஞ்சும் ரசிகர்களின் அலும்பு தாங்கல.

நெகட்டிவ்
பல சீரியல்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நெகட்டிவ் கேரக்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் கிருத்திகா அண்ணாமலை. தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் எவர்கிரீன் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் இவரைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்திலும் பாலோவர்ஸ்களாக மாறி விட்டனர்.

பாண்டவர் இல்லத்தில் கலக்கல்
பாண்டவர் இல்லம் சீரியலில் இவர் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உயரத்திற்கும் அழகுக்கும் தகுந்த மாதிரி கம்பீரமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இவர் உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார் .ஆனால் கொஞ்ச நாளிலேயே சர்போட்டா படத்தில் ஆர்யாவின் கம்பேக் போல இவரும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார் .
Recommended Video

எடைக் குறைப்பு
குறைந்த காலத்திற்குள்சுமார் 25 கிலோ எடையை குறைத்து பள பளனு மீண்டும் பார்மில் வந்துவிட்டார் .விட்ட இடத்தை பிடித்து இப்போ படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பை பார்த்து சிலர் மிரண்டு போய் இருக்கின்றனர். அதிகமான சீரியல்களில் இவர் நெகட்டிவ் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் .இவருடைய உடல் அமைப்புக்கு அந்த கேரக்டர்தான் செட்டாகுதுனு அப்படியே வாய்ப்பு கிடைக்கிறதாம். ஆனால் என்னுடைய கேரக்டரில் நான் கலக்குவேன் இவரும் கலக்கி வருகிறார்.

மாமரத்துக்கு கீழே
சீரியலில் இவரை பார்த்த ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் இவருடைய போஸ்ட் பார்த்து அசந்து போயிருக்கின்றனர். அடிக்கடி மாடல் உடையில் போட்டோக்களை குவித்து வந்த இவர் தற்போது பட்டுப்புடவையில் கை நிறைய வளையலும் தலையில் மல்லிகைபூவுமாக மங்களகரமாய் ஜொலிக்கிறார். மாமரத்துக் கீழே ஒரு மாயாஜால வித்தையைக் காட்டிவிட்டார்.


Click it and Unblock the Notifications











