குமரனுக்கு பர்த் டே கொண்டாட்டம்.. அதில் குவிந்ததம்மா.. பெண்கள் எல்லாம்.. திண்டாட்டம்!

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களின் கனவு நாயகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை அந்த சீரியல் குழுவினர் வெகு சிறப்பாக செய்து அசத்தி இருக்கின்றனர் .

யாரும் எதிர்பார்க்காத வகையில் இத்தனை வகை வகையாக கேக் வெட்டி சர்ப்ரைஸ் குமரனுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் தற்போது பல பேர் பார்த்து ரசிக்கும் சீரியலாக இருந்து வருகிறது .

குமரன் பிறந்த நாள்

குமரன் பிறந்த நாள்

அந்த சீரியலில் அதிக ரசிகர்களை கொண்ட குமரன் தான் தற்போது அவருடைய பிறந்தநாளை வெகு சிறப்பாக அந்த சீரியலின் நடிகர்கள் நடிகைகள் படக்குழுவினருடன் கொண்டிருக்கின்றனர். அதுவும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இவர்கள் செம என்ஜாய்மென்ட் பண்ணி போட்டோஸ் களும் வீடியோக்களை எடுத்து குவித்திருக்கின்றனர். தற்போது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் குமரனுக்கு அவருடைய ரசிகர்களும் திரைத்துறையினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இவர்கள் கொண்டாடிய போட்டோக்களை பார்த்தால்தான் தெரிகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் எந்த அளவிற்கு அனைவரும் கலகலப்பாக இருக்கிறார்கள் என்று.

அழகான கதை

அழகான கதை

அந்த சீரியல் பல திரைப்படங்களிலும் பார்த்த குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுத்திருந்தாலும் சீரியலில் நடிப்பவர்கள் உண்மையிலேயே ஒரு குடும்பம் போல தான் பழகி வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு சாட்சியாக தான் தற்போது இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த சீரியலில் கதிர் முல்லை கேரக்டரை ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவர் மனதிலும் இவர்களின் ஜோடிதான் நல்ல இடத்தைப் பிடித்திருந்தது .

சித்து சித்ரா

சித்து சித்ரா

ஆனால் அதுவும் முல்லை கேரக்டரில் சித்ராவின் முகத்தை தான் இவர்கள் இப்ப வரைக்கும் சித்ராவின் ரசிகர்கள் வைத்திருக்கின்றனர் குமரனும் சித்ராவும் சீரியலில் கேரக்டராக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நின்ற ஜோடியாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தனர். திடீரென சித்ரா இறந்ததும் அனைவரும் அதிர்ச்சி ஆகி இருக்கும் நிலையில் சீரியலில் அவருடன் நடித்தவர்களும் பெரும் துக்கத்தில் இருந்து வந்தனர் .

சித்ரா இல்லாமல் சோகம்தான்

சித்ரா இல்லாமல் சோகம்தான்

ஆனால் அந்த கேரக்டருக்கு புது நடிகை நடிக்க வந்தது போல தற்போது அனைவரும் சித்ராவை மறந்து விட்டார்கள் என சித்ராவின் ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். அதுவும் இல்லாமல் குமரனின் போன பிறந்தநாள் பங்ஷனில் ஜாலியாக சித்ரா கலந்து கொண்டிருந்தார் .ஆனால் தற்போது அவர் இல்லை ஆனாலும் அவரை யாரும் நினைக்காமல் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

குமரனுக்கு வாழ்த்துகள்

குமரனுக்கு வாழ்த்துகள்

இப்படித்தான் சித்ராவின் ரசிகர்கள் கவலையோடு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ஆனால் அவையெல்லாம் எங்கள் மனதிற்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையே நினைத்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் அடுத்த நிலைமைக்கு யாரும் போக முடியாது என்று சித்ராவின் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியிருந்தாலும் குமரனின் பிறந்த நாளுக்கும் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனைவி, மகன்

மனைவி, மகன்

இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . அதனால்தான் ரசிகர்கள் அவர்களின் பெயரில் பல ஃபேன்ஸ் பேஜ்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றிலும் கூட தற்போது குமரனின் பிறந்தநாள் போட்டோஸ்கள் தான் வலம் வருகின்றது. குமரனின் பிறந்தநாளுக்கு அவருடைய மனைவி மகன் மற்றும் பாண்டியன் ஸ்டோர் குழுவினரும் பல கேக்குகளை வாங்கி குவித்து சர்ப்ரைஸ் கொடுத்திருந்தனர்.

சித்ரா இருந்திருந்தா வேற லெவல்

சித்ரா இருந்திருந்தா வேற லெவல்

அதிலும் அவரது முகத்தை பதித்த கேக் வேற லெவல் ஆக இருந்தது. அதுமட்டுமல்லாமல் இன்னொரு கேக்கில் குமரனின் புகைப்படங்களையும் வைத்து அசத்தி இருந்தார்கள் இதைப் பார்த்ததும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். என்ன ஒன்று இந்த கொண்டாட்டத்தில் சித்துதான் இல்லாமல் போய் விட்டார். இல்லாவிட்டால் இது வேற லெவலில் இருந்திருக்கும்.

சூடான சுவையான சினிமா மற்றும் தொலைக்காட்சி செய்திகளுக்கு பிலிமிபீட் தமிழ் இணையதளத்தின் டெலிகிராம் சானலுடன் இணைந்திருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X