Just In
- 4 hrs ago
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- 4 hrs ago
ஸ்கூல் யூனிபார்மில்.. நடுக்காட்டில் நாயுடன் பிரபல நடிகை !
- 5 hrs ago
மலையாளத்தில் அறிமுகமாகும் காயத்ரி ... இயக்குனர் யார் தெரியுமா?
- 8 hrs ago
அட கடவுளே.. தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ரிலீஸ்?
Don't Miss!
- News
கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி
- Finance
கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..!
- Automobiles
2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன? கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Lifestyle
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
pandian stores serial: குன்னக்குடி டு பழனி பாதயாத்திரை... குழந்தை பாக்கியம்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்துக்கு குழந்தை இல்லேன்னு அத்தை சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. குன்னக்குடியிலேர்ந்து பழனிக்கு பாதயாத்திரை போனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொல்றாங்க.
அத்தையின் பேச்சால் உடைஞ்சு போனது தனம் மட்டும் இல்லை. புருஷன் மூர்த்தியும்தான்... ஒரே சோக காட்சியா அரங்கேறி வருது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில். பார்க்கவே கஷ்டமா இருந்தாலும், அவங்களோட சேர்ந்து ஃபீலிங்ஸ் ஆஃப் இண்டியான்னு மக்களும் ஒரே ஃபீல்தான்.
குடும்பம்னா எல்லாம் இருக்கணும்... அதைத்தான் சீரியலில் காமிக்கறோம்னு சீரியல் எடுப்பவர்கள் வரிஞ்சுக் கட்டிக்கிட்டு காமிக்கறாங்க. அது நல்லாருக்கா, இல்லையான்னு சொல்ல வேணாமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் சீரியஸ் வேற லெவல்.

ஃபீலிங்ஸ் ரொமான்ஸ்
தனம், மூர்த்தி தம்பதியின் பர்சனல் கதையை இப்போதுதான் சீரியஸாக்கி காண்பிக்கறாங்க. முன்னாடி வரைக்கும் குடும்பத்துக்கு என்ன நடந்தது... ஜீவா வாழ்க்கை விவகாரம்.. முல்லை கதிர் கல்யாணம், பிறகான காதல்.. மீனா உண்டானது.. அதை குடும்பம் கொண்டாடியது என்று கதை சென்றுக்கொண்டு இருந்தது. இப்போதைய காலக்கட்டத்தில் தனம் மூர்த்தி ஃபீலிங்ஸ் காட்சிகள்...

இல்லை குழந்தை
குழந்தை இல்லை என்று தனத்தை அவள் அம்மா கோச்சுக்கிட்டாங்க. முல்லையும், கதிரும் ஆஸ்பிடல் போயி இவங்களுக்காக விசாரிச்சும் வந்துட்டாங்க. பாவம் மூர்த்தி மனசில் உள்ளதை தனத்திடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். இந்த நேரத்தில்தான் அங்கு சக்கர நாற்காலியில் வந்த அத்தை, ஏன் மூர்த்தி தனத்தை அழைச்சுக்கிட்டு குன்னக்குடியிலேர்ந்து பழனிக்கு பாத யாத்திரை போனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொல்றாங்க.. போகலாம் இல்லேன்னு சர்வ சாதாரணமா கேட்டுட்டாங்க.

அத்தை விட்ருங்க
அத்தை ப்ளீஸ்.. என்கிட்டே இனிமே குழந்தை குழந்தைன்னு யாரும் கேட்காதீங்க... பதில் சொல்லி நான் ஓய்ஞ்சு போயிட்டேன்.. ப்ளீஸ் அத்தைன்னு கை எடுத்து கும்பிடறா தனம். எல்லாரும் ஸ்தம்பித்து நிக்கறாங்க. அவள் அழுதுகொண்டே சென்றுவிடுகிறாள். காலம் போன காலத்தில் இப்படி கேட்கும் அத்தை, ஆரம்பத்தில் கேட்காமல் விட்டது ஏன்?

வருத்தப்படும் மூர்த்தி
அம்மா பேசியதை கேட்டு தனம் அழுதுகொண்டே போக, பின்னாலே போன மூர்த்தி, எல்லாம் என்னாலதான் தனம்.. உன்னைதான் எல்லாரும் கேட்கறாங்க.. கடைசி வரைக்கும் உனக்கு நல்லதை செய்ய முடியாத பாவி ஆயிட்டேனே.. என் தம்பிகளுக்காக உனக்கு பிள்ளை பொறக்க கூடாதுன்னு சொல்லிட்டேன்.. நமக்கு ஒரு குழந்தை பொறந்தாலும் தம்பிங்களையும் நல்லாத்தான் வளர்த்து இருப்பே தனம்..என்று சொல்லி வாய்விட்டு அழறான்.

உங்களுக்கு ஆசை
எனக்கு குழந்தை ஆசை இருக்குன்னா.. உங்களுக்கு மட்டும் இல்லையா மாமா? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதானே மாமா.. விட்டுடுங்க மாமான்னு தனம் அழறா. இல்லை தனம் உன் அம்மா கோச்சுக்கிட்டு போயிட்டாங்க. உன் அண்ணனும் பேசறதில்லை. உன் பக்கத்து உறவுகள் எல்லாம் உன்னை ஒதுக்கற மாதிரி பண்ணிட்டேன்னு அழுகை காட்சி டச்சிங்.