குஷ்பூ பிரச்சாரத்துல பிஸி.. பஞ்சு மிட்டாய் - பட்டர் பிஸ்கட் ரொமான்ஸுல பிஸி...!

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நல்ல செட் போட்டு செலவு செய்து, காட்சிகளை சூட் செய்திருக்காங்க. அதுலயும் அந்த பிள்ளையார் கோயில் ரொம்ப இயற்கையா இருக்கு.

ஆனா, பிள்ளையார் சிலைதாங்க பிள்ளையார் சதுர்த்திக்கு செய்த பொம்மை பிள்ளையார் போல வச்சிருக்காங்க. அதுல அடிக்கடி காட்சி வருது.. ஸோ, அதுல கொஞ்சம் மெனெக்கட்டு, கல் பிள்ளையார் சிலை போல வச்சிருக்கலாம்.

சன் டிவிக்கு போட்டிகள் முளைத்துவிட்ட பிறகு இது மாதிரியான காஸ்ட்லி சீரியல்கள் தேவைப்படுது. அதோட சின்ன சின்ன விஷயங்களையும் கவனிச்சு தவறு இருந்தா சரி செய்துகிட்டா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் டாப்புல போயிரும்.

கண்களை உருட்டினா

கண்களை உருட்டினா

பஞ்சு மிட்டாய் பாக்கிய லட்சுமியா நடிச்சுருக்க நட்சத்திரா நல்லா ரொமான்ஸ் பண்றாங்க. ரவியா நடிக்கும் உசேனுக்கு முன்னால காட்சியின் ரொமான்ஸ் பக்குன்னு பத்திக்கறது பஞ்சு மிட்டாயிடம்தான். சின்ன கண்ணுதான்.. அதுல பெரிசா ஒண்ணும் ரொமான்ஸ் காட்ட முடியாதுன்னு நினைச்சா ஒரு உருட்டு உருட்டறாங்க பாருங்க.. பக்குன்னு பத்திக்குது.

பொஸசிவ்

பொஸசிவ்

பஞ்சுமிட்டாய்க்கு பட்டர் பிஸ்கட் ரவி மேல பொஸசிவ் இருக்குன்னு காமிக்க, நல்ல காட்சி வச்சிருந்தாங்க. தேஜா வேணும்னே விக்கல் வந்த மாதிரியும், அது நிக்காத மாதிரியும் நடிக்கறா. பஞ்சுவுக்கு ஒரு முறை விக்கல் வந்தப்போ, ரவி லட்சுமி ஐ லவ் யூன்னு சொன்னது நினைவுக்கு வருது.அப்படி சொல்லுடா எனக்கும்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு தேஜா விக்க, லட்சுமி தவிக்கறா.

எடு கத்தியை

எடு கத்தியை

பாக்கியலட்சுமி இவளை என்ன செய்யலாம்னு யோசிச்சு..திடீர்னு கத்தி கண்ணில் பட அதை எடுக்கறா. எடுத்து கையில புடிச்சுகிட்டு, தேஜாவை நோக்கி ஒடி வர்றா.உன்னைன்னு சொல்லிக்கிட்டு ஓடிவர பயத்தில் எழுந்துடறா தேஜா. சும்மாதான்.. விக்கல் நின்னுருச்சு பாருங்கன்னு சொல்றா லட்சுமி.

குல்பி ஐஸ்

குல்பி ஐஸ்

என்ன செய்தாலும் பாக்கிய லட்சுமி பேச மாட்றாளேன்னு ஒரு ஐடியா பண்ணி சின்ன மணியை கயிற்றில் கட்டி எடுத்துட்டு வர்றான். கட்டில்ல வேலை பார்க்கும் பெண் ஒருத்தி, இது எதுக்கு ரவி எடுத்துக்கிட்டு வர்றே.. குல்பி ஐஸ் விக்க போறியான்னு கேட்கறா. ஆமா, குல்பி ஐஸும் விற்பேன், பஞ்சு மிட்டாயும் விற்பேன்னு சொல்றான்.

கட்டி விளையாட்டு

கட்டி விளையாட்டு

நான் சொல்ற இந்த விளையாட்டுல எல்லாரும் கண்களை கட்டிக்கணும்.. எல்லாரும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணதான் இந்த விளையாட்டுன்னு சொல்றான் ரவி. அப்படி என்ன விளையாட்டுன்னு கேட்க, நான் எல்லார் கண்களையும் கட்டிடுவேன்..இந்த மணியை இங்க கட்டி தொங்க விடுவேன். இதை யார் முதலில் அடிக்கறாங்களோ.. அவங்க கூட இன்னிக்கு நான் சினிமாவுக்கு வருவேன்னு சொல்றான்.

காதில்

காதில்

எல்லாருக்கும் கறுப்புத் துணியை கட்டிவிட்டவன், லட்சுமியிடம் வந்த போது, அவள் காது மடலைத் தட்டி சீண்டறான். அதிர்ந்த லட்சுமி கண்களை உருட்டி என்ன நடந்ததுன்னு ரவியை பார்க்கறா. அந்த இடத்தில் இது ஒரு சின்ன ரொமான்ஸ்.

சினிமாவுக்கு

சினிமாவுக்கு

தேஜாதான் சினிமாவுக்கு ரெண்டு டிக்கெட் வச்சுருக்கா. ஆனா, எல்லாரும் தோத்துப் போக, லட்சுமி ஜெயிச்சுடறா. தேஜா டிக்கெட் குடு.. நானும் லட்சுமியும் சினிமாவுக்கு போறோம்னு சொல்றான்.லட்சுமி நகர்ந்துக்கறா. சாயங்காலம் வரைக்கும் லட்சுமி பேசலை.. பிள்ளையாரிட,ம் கற்பூரத்தை ஏத்தி கையில காட்டிகிட்டு இருக்கான். லட்சுமி 6 மணி ஆச்சேன்னு பதட்டமாகறா..

குஷ்பூ வரட்டும்..

குஷ்பூ வரட்டும்..

மீதி நாளைக்குத்தான்..குஷ்பூ பிரச்சாரத்துல இருக்கறதுனால, இவங்க ரொமான்ஸ், ஊடல், கூடலை வச்சு லட்சிமி ஸ்டோர்ஸ் போயிகிட்டு இருக்கு. எலெக்ஷன் முடியட்டும் குஷ்பூ அமர்களப்படுத்திடுவாங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X