சமூகப் பிரச்சினைகளை பேசுகிறேன்: அச்சம் தவிர் குஷ்பு

By Mayura Akilan

கட்சிப்பிரச்சினையோ, கற்பு பிரச்சினையோ எதுவென்றாலும் மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடுவார் குஷ்பு. அதற்காக அவர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

சர்ச்சை நாயகி என்று பெயரெடுத்தாலும் உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த மறுநொடியே அதைப்பற்றியும் டுவிட்டரில் கருத்து சொன்னார். அச்சமின்றி பேசும் குஷ்பு இப்போது அச்சம் தவிர் என்ற ரியாலிட்டி ஷோவை தந்தி டிவிக்காக நடத்துகிறார்.

இது குடும்பப்பிரச்சினைகளை அலசும் நிகழ்ச்சியல்ல சமூகப் பிரச்சினைகளை அலசும் நிகழ்ச்சி என்கிறார் குஷ்பு பிரபல வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியை படியுங்களேன்

சமூகப் பிரச்சினைகள்

சமூகப் பிரச்சினைகள்

அச்சம் தவிர் நிகழ்ச்சியில் தனி நபரைப் பற்றி பேசப் போவதில்லை. சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசப்போகிறோம். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பேசப்படும் பிரச்சினைக்கு நிகழ்ச்சி முடியும் போது தீர்வு கிடைத்து விடும். அது பங்கேற்பாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் பயன்படும்.

கற்பு பற்றி கருத்து

கற்பு பற்றி கருத்து

கற்பு பற்றி நான் கூறிய கருத்துக்கு என்னுடன் பல தரப்பில் இருந்து மல்லுக்கு வந்தபோது சுப்ரீம்கோர்ட் வரை சென்று போராடினேன். இப்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. என்னை எதிர்த்தவர்கள் இப்போது முகத்தை எங்கு கொண்டு போய் வைத்துக் கொள்ளப் போகிறார்கள்?

ஜாக்பாட் ஜாக்கெட்

ஜாக்பாட் ஜாக்கெட்

ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஜாக்கெட் பற்றி பேசப்பட்டது. பெண் தொகுப்பாளர்களின் உடை பற்றி கூடுதல் கவனம் இருக்கும். பார்வையாளர்கள் பெண்களாக இருந்தால் உடை பற்றி கண்டிப்பாக பேசத்தான் செய்வாங்க. உடை விசயத்தில் பெண்களின் விருப்பங்கள், விமர்சனங்களுக்கு அணை போட முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X